மூவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. அவர்களில் நானாஜி மிகச் சிறந்த சேவை ஆற்றியவர்.

பத்ம விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் குறித்து இப்படியான கருத்துகளைச் சொல்கிறார்கள்!

//முனைவர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மவிபூஷணும் மனம் மகிழச்செய்கிறது. அரசியல் பகைமையால் பொய்யான ஒரு சதிக் குற்றச்சாட்டில் சிக்க வைக்கப்பட்டவர். அதற்கு தொண்ணூறு விழுக்காடு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கேரள மார்க்ஸிஸ்ட் கட்சி, குறிப்பாக வி.எஸ்.அச்சுதானந்தன். தும்பா கிரயோஜெனின் ராக்கெட் நிலைய ரகசியங்களை மாலத்தீவு பெண் வழியாக அயல்நாடுகளுக்கு விற்றதாக நம்பிநாராயணன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முன்னாள் முதல்வரும் காங்கிரஸ்காரருமான கே.கருணாகரனின் அணுக்கரான ரமன் ஸ்ரீவஸ்தவா என்னும் காவல்துறை உயரதிகாரியைச் சிக்கவைப்பதற்காக முடையப்பட்டது. அதில் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்கும் இருக்கலாம் என இன்று சொல்லப்படுகிறது//

கண்முன் நடந்த வரலாற்றைக் கூட கொஞ்சமும் வெட்கமில்லாமல் தன் உள்-அரசியல் லாபங்களுக்காக திரிப்பது எப்படி என்பதற்கான நல்ல உதாரணம் மேலே இருக்கும் எழுத்துக்கள். உண்மையில் இந்த பிரச்னை வெடித்து பூதாகாரமாக கிளம்பிய போது காங்கிரஸ் கட்சிதான் மாநிலத்தை ஆண்டது. இங்கே தேசத்தின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை சீர்குலைத்த அரசியல் அந்தோனிக்கும் கருணாகரனுக்கும் இடையே நடந்தது. அதன் பிறகு வந்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் அரசின் முதலமைச்சர் ஈ.கே.நாயனார். இதே சதி திட்டத்தில் பங்கு பெற்ற ஸ்ரீ குமார் என்கிற போலீஸ் அதிகாரியைத்தான் குஜராத் கலவரங்களில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஊர் ஊராகக் கொண்டு சென்றார்கள் இன்றைய ஜின்னாவியர்கள், இந்துத்துவ இந்துமத பாக பிரிவினைக்காரர்கள். பாவம் அச்சுதானந்தன்!

நானாஜி தேஷ்முக் என்றாலே முதலில் நினைவில் வருவது அவரது முன்னுதாரணக் கிராமங்களில் அவர் வழக்குகளை இல்லாமல் ஆக்கியதுதான். காந்தியவாதி அல்ல அவர். தெள்ளத்த்தெளிவான தீன் தயாள் உபாத்தியாயவின் ஏகாத்ம மானுடவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். அவரது பேச்சை ஒருமுறை கேட்ட எவருக்கும் அவரது ஆதார கருத்தியல் எது என்பது புரியும். எல்லாவற்றையும் காந்தியிலும் கடைசியில் காந்தியை மாட்டிறைச்சியிலும் இணைக்கும் இன்றைய காந்தி-இலக்கியவாதி இத்யாதி மிகக் குறைந்த பட்சம் சங்கத்தை கறைபடுத்த முயற்சிக்க வேண்டாம். கங்கையில் உமிழ்வதால் கங்கைக்கு பாதகமில்லைதான். இருந்தாலும் அது அசிங்கம் என்பதால்.

  • அரவிந்தன் நீலகண்டன் (எழுத்தாளர்)
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...