90 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா உலகம் விளையாட்டு
indian team - 2026

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நியூசிலாந்தின் மவுண்ட் மௌங்கனி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷிகர் தவான் 67 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 43 ரன்களும் அம்பதி ராயுடு 47 ரன்களும் எடுத்தனர். தோனி 48 ரன் எடுத்தார்ர் கடைசி ஓவரில் புகுந்து விளையாடிய கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்தார்

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்தது.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குப்தில் 15 ரன்னும், மூன்றோ 31 ரன்னும் எடுத்தனர் பின்னர் வில்லியம்சன் 20 ரன்களும் டெய்லர் 22 ரன்களும் எடுத்தனர்

டாம் லாதம் 34 ரன்களுக்கும் நிக்கோலஸ் 28 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரேஸ்வெல் 46 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 57 ரன் குவித்தார்

இருப்பினும் அந்த அணி 40.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களே எடுக்க முடிந்தது இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் முகமது சமி கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி 90 ரன்களில் வெற்றி பெற்றது! இந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிரது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.