தினகரனை வேரறுப்போம் என்றுதான் ஸ்டாலின் அப்படிச் சொன்னாராம்..!

அடடே... அப்படியா?
sddefault 26 - 2026

திருச்சியில் திருமாவளவன் கூட்டிய சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் மு.க.ஸ்டாலின்.

அப்போது அவர், சாத சாதனத்தை வேரறுப்போம் என்று தட்டுத் தட்டுமாறி சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரு வார்த்தையை ஒழுங்காக உச்சரிக்க கூட இயலவில்லையா என்று கேலியும் கிண்டல்களும் சமூக வலைத்தளங்களில் நிரம்பின.

இந்நிலையில், ஸ்டாலின் பேச்சுக்கு வியாக்கியானம் கொடுத்து வருகிறார்கள் சிலர். சாத என்றால் சோறு. சாத சாதனம் என்றால், சோறை ஆக்கும் சாதனம். அது ஆங்கிலத்தில் குக்கர் எனப் பொருள்படும்.

அண்மைக் காலமாக தன்னை வறுத்துக் கொண்டிருக்கும் அமமுக., துபொசெ., டிடிவி தினகரனை மனத்தில் கொண்டுதான், அவரது குக்கர் சின்னத்தை மனத்தில் கொண்டுதான், அவ்வாறு சாத சாதனத்தை வேர் அறுப்போம் என்று முழங்கினார் ஸ்டாலின் என்கிறார்கள்.

காரணம், ஆர்.கே.நகரில் டிடிவியிடம் வாங்கிய அடி அப்படிப் பட்டது என்றும், அதை ஸ்டாலினால் இன்னும் மறக்க முடியவில்லை என்றும் கருத்துகள் பரவி வருகின்றன..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.