நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பாஜகவில் 1000 பேர் இனணயும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக, நெல்லை மாவட்டத்துக்கு வந்திருந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
முன்னதாக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த தமிழிசை, அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று அந்தப் பெண் விமானத்துக்குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்திலும் முழக்கமிட்டதாக தமிழிசை குற்றம் சாட்டினார்.
வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் தமிழிசையை சமாதானப் படுத்தினர். பின்னர் அந்த இளம்பெண் மீது புகார் அளித்த தமிழிசை அங்கிருந்து தென்காசி புறப்பட்டுச் சென்றார்.
விசாரணையில் அந்தப் பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், கனடாவில் பயின்று வரும் அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்ததும் தெரிய வந்தது.




