தேர்தல் நேரம் என்பதால் பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்தாராம் ஒடிசா முதல்வரின் சகோதரி!

இந்தியா லைஃப் ஸ்டைல்
denied padmasri - 2026

புது தில்லி: இது தேர்தல் நேரம் என்பதால், அரசியல் சூழல்களால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார் கீதா மேத்தா!

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும், எழுத்தாளருமான கீதா மேத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இந்த விருதை ஏற்க மறுத்துள்ளார்.

என்னை அங்கீகரித்து விருது அறிவித்ததற்கு நன்றி என்று கூறியுள்ள அவர், அதேநேரம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்க இயலாமல் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு எனக்கும், மத்திய அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என கீதா மேத்தா தெரிவித்துள்ளார்.

ஒடிஸா மாநிலத்தில் ஆளும் நவீன் பட் நாயக்கின் சகோதரி என்பதால், அரசியல் ரீதியாக இது குடும்பத்துக்குள்ளும் ஆளும் தரப்பிலும் தனக்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடும் என்று கருதிய கீதா மேத்தா இவ்வாறு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.