முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் ஓ.பி.எஸ். பேசுகிறார் என்று டிடிவி தினகரன் நக்கல் அடித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்!
தஞ்சையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்தார் டிடிவி தினகரன். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓ.பி.எஸ். தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, இவ்வாறு கூறினார்.
ஏற்கெனவே, இரு தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, விரிசல் அதிகரிக்க வேண்டும் என்று சிலர் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், ஓபிஎஸ்., ஈபிஎஸ் இடையே தூபம் போடும் வகையில், முதலமைச்சர் பதவி குறித்து டிடிவி தினகரன் கூறி தூபம் போட்டு வருவது குறிப்பிடத் தக்கது.




