மதுரை மோடிக்கு நன்றி சொல்கிறது! ட்ரெண்டிங் ட்வீட்.. #MaduraiThanksModi

இந்தியா
India manned space modi - 2026

மதுரை மோடிக்கு நன்றி சொல்கிறது என்ற பொருள் படும்
#MaduraiThanksModi டிவிட்டர் ஹாஷ் டாக் இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை 27ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகிறார். மேலும், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டவும், எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவும் சில கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு முன்னே நிற்பதால், பாஜக.,அதற்கு எதிராக செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எற்கெனவே கோபேக் மோடி என்ற ஹாஷ்டாக் போட்டு கடந்த வருடம் கேவலப் படுத்திய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முறையும் அதே போன்ற செயல்களில் ஈடுபடக் கூடும் என்று தெரியவருகிறது. இந்நிலையில், பாஜக.,வினரும் மோடி அபிமானிகளும் இந்த ஹேஷ்டாக்கை போட்டு பிரபல படுத்தி வருகின்றனர்.

மதுரை வரும் பிரதமரை வரவேற்கும் வகையில் இந்த ஹேஷ்டேக் இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.