எஸ்டிபிஐ., தலைவர் கைது: இரவிலும் காவல் துறை அலுவலகம் முற்றுகை!

இந்தியா சற்றுமுன்
sdpi-muslims-infront-of-police-hq
sdpi-muslims-infront-of-police-hq

பெங்களூரில் எஸ்டிபிஐ தலைவர் கைது செய்யப் பட்ட நிலையில், காவல்துறை அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரில் பேஸ்புக் பதிவு ஒன்று சர்ச்சைக்குரியதாக மாறியது. உள்ளூர் எஸ்டிபிஐ, தலைவர் பாஷா அழைப்பின் பேரில் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்டு உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீடு தீவைக்கப் பட்டு, கலவரமாக மாறியது.

தொடர்ந்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற வன்முறை கும்பல், அங்கும் வண்டிகளை தீ வைத்து எரித்து, காவல் நிலையத்தை சூறையாடியது. இதை அடுத்து, போலீசாரின் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வட பெங்களூர் பகுதியில் வசிக்கும் எஸ்டிபிஐ மாநில தலைவர்களில் ஒருவரான முஸ்ஸமில் பாஷாவை கர்நாடக காவல்துறை கைது செய்து காவல்துறை தலைமை அலுவலகம் கொண்டு சென்றது

தகவலறிந்து வந்த முஸ்லிம் அமைப்பினர் காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.