
புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடியில் குடிநீர் திட்டப்பணியை எம்எல்ஏ மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.
அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிங்குடி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் திட்டபணி தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி தலைமை வகித்தார்.ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் ஊராட்சிதலைவர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் ஆதார பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக குடிநீர் நீர்தேக்கதொட்டி கட்டப்பட்ட நிலையில் தற்போது ஆழ்குழாய் கிணறுஅமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கவுன்சிலர் செந்தமிழ் செல்வன் முன்னாள் கவுன்சிலர் உத்தமநாதன் கருணாநிதி, செந்தில்குமார், பழனிமுருகன் , முருகையா, சக்திவேல்,பிச்சைமுத்து,மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



