பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்!

பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை சிபிஐ  விசாரிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விட அதிக விவரங்களும் குற்றப் பின்னணிகளும் தெரிந்து வைத்திருக்கும் நக்கீரன் கோபால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோரிடம் இருந்து விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும். அப்போதுதான் முழு குற்றவாளிகளும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று  பலத்த குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பொய்ச் செய்திகளும் வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன. இந்த விவகாரம் குறித்து தைரியமாக வெளியில் வந்து புகார் கொடுத்த பெண்ணும் குடும்பத்தினரும் கதறி அழுது கெஞ்சுகின்ற சூழலிலும் இதனை அரசியல் ஆக்கி வருகிறது திமுக.,

பெண்களின் மானப் பிரச்னையை வைத்து குளிர்காயும் திமுக., மற்றும் அதன் ஏஜெண்ட்களான நக்கீரன், விகடன், குடும்ப தொலைக்காட்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் பொய்ச் செய்தி பரப்பி, எங்களை தற்கொலை செய்யத் தூண்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்.

இது குறித்து… சமூக வலைத்தளங்களில் உலாவரும் சிலரது உள்ளக்குமுறல் இவை…

தமிழ்நாட்டின் அரசியல் மிகக் கேவலமான வகையில் – வெறுப்பையும் பொய்ச் செய்திகளையும் பரப்பும் கோயபல்ஸ் முறைக்கு மாறியுள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை எப்படியாவது அதிமுக அரசின் தலையில் கட்ட வேண்டும் என்பதற்காக திமுகவின் 200 ரூபாய் கும்பல் அப்பட்டமான பொய்ச்செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறது.

இந்த சூழலில், சிறுமிகளிடம் காதலிப்பது போன்று நடித்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர வழக்கினை சிபிசிஐடிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.

இதனால், இந்த விவகாரத்தில் அருவருக்கத்தக்க வகையில் பொய்ச்செய்திகளை பரப்பிய திமுக பொய்ச் செய்தி கும்பலின் அரசியல் சுயநலக் கனவு தகர்ந்துள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், கூறுகையில், “தோ்தல் சமயம் என்பதால் இந்த விவகாரத்தில் என் மீது திட்டமிட்டு திமுக அவதூறு பிரசாரம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில், எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ தொடா்பு இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக செல்கிறோம்.

குறிப்பாக சொல்வதென்றால் முதன்முதலில் இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தது நான் தான். பின்னா் கடந்த மாதம் 27ம் தேதி எங்கள் கட்சி எம்.பி. தலைமையில் மாவட்ட எஸ்.பி.யிடம் முறையாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

புகாா் அளித்த அந்த குழுவில் எனது மகனும் இருந்தாா். பின்னா் நான் இது தொடா்பாக பத்திாிகையாளா்களுக்கு பேட்டியும் அளித்துள்ளேன். திட்டமிட்டு என் மீது அவதூறு செய்பவா்கள் மீது காவல்துறையிடம் புகாா் அளிக்க உள்ளேன். குற்றவாளிகள் யாரையும் அதிமுக பாதுகாக்கவில்லை. அப்படி எதுவும் செய்யாது.

இவை அனைத்தும் திமுக தலைவா் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உத்தரவால் நிகழும் காரியங்கள் தான்” என்று அவா் தொிவித்துள்ளாா்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...