மசூத் அசார்ஜி குமரியில் உங்களுக்கு என்ன அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் ராகுல்?

Published:

todays congress - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.

சென்னை வரும் ராகுலுடன் உரையாடுவதற்கு கிறிஸ்துவ அமைப்புகள் தங்கள் கல்லூரி வளாகங்களில் ஏற்பாடுகள் செய்துள்ளன. குறிப்பாக, கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் தன்னாட்சிக் கல்லூரிகள், ராகுலுடன் மாணவர்கள் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இன்று காலை 11 மணிக்கு சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

அதன் பின் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் சந்திப்பிலும் ராகுல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, காரில் நாகர்கோவில் செல்கிறார். மாலை நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லுரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இந்நிலையில், இலங்கைத் தமிழரைக் கொன்ற ராகுலே திரும்பிப் போ என்ற கோஷங்கள் டிவிட்டர் பதிவுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்காக கோபேக்ராகுல் கோபேக் பப்பு உள்ளிட்ட ஹாஷ் டாக்குகள் டிவிட்டரில் வலம் வருகின்றன. மசூத் அசார்ஜி குமரியில் என்ன டாஸ்க் கொடுத்திருக்கிறார் ராகுல் என்று கேள்விகளும் முன்வைக்கப் படுகின்றன.

Related articles

Recent articles

spot_img