பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது! ஐ.நா.,வில் இந்தியா குற்றச்சாட்டு!

Published:

united nations - 2026

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தானின் அறிக்கைக்கு இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதில் இந்தியா மீது தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஜெய்ஷ் ஸ்ரீ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மூலம் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், முன்னாள் பாதுகாப்பு துறை ஆலோசகர் துரானி உள்ளிட்டோர் உறுதிப் படுத்தியுள்ளதாகவும், எனவே பாகிஸ்தான் வேண்டுமென்றே பொய் கூறி திசைதிருப்பி வருவதாகவும், தற்போதும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img