ஓக்ஹி புயல் பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்கக் கோரி வழக்கு

இந்தியா சற்றுமுன் சென்னை

ஓக்ஹி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

இதற்கு டிச. 20-க்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி கேரளாவில் 31 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.