தெரு நாயை விழுங்கும் மலைப்பாம்பு ! வைரலாகும் வீடியோ !

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்

hill snake - 2026ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூர் எனும் இடம் அமைந்துள்ளது. உதய்ப்பூர் பகுதிக்கு உட்பட்ட வனத்திலிருந்து ஆர்வலர் ஒருவர் எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்டுப் பகுதியில் உள்ள 13 அடி நீளமுள்ள பயங்கரமான மலைபாம்பானது அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாயை முழுவதுமாக விழுங்கியுள்ளது. இதனை கண்ட மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த தெரு நாயை பாம்பானது ஒரு இடத்தில் கக்கியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த வனப்பகுதியை சுற்றி வாழும் மக்கள் ராட்சத மலைப்பாம்பை காண்பதற்கு கூடினர். அப்போது அங்கு இருந்த வனத்துறை ஆர்வலர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.