October 20, 2021, 12:34 pm
More

  ARTICLE - SECTIONS

  கிறுக்கன் வீர்மணிக்கு அறிஞர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் அறிவுரை!

  mav veeramani - 1

  மூளை இல்லாமல் பேசும் முட்டாள் வீரமணி மெண்டல் ஆகிப் போய்… உளறிக் கொட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் பிரித்து மேய்ந்து வருகிறார்கள்

  வைணவ அறிஞர் பெருமக்கள் பலரும் வீரமணி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து திமுக என்றாலே இப்படித்தான் இந்து தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் ஒரு அரக்கர் கூட்டம்; இந்த அரக்கர்களுக்கு இந்தத் தேர்தலில் அமைதியையே விரும்பும் இந்துக்கள், உண்மையிலேயே கடவுளை நம்பும் இந்துக்கள், தங்கள் வலிமை மிகுந்த ஆயுதமான ஓட்டு என்பதை, ஒன்றுபட்டு தங்கள் சக்தியை திமுக., வேட்பாளர்களுக்கு எதிராக அளித்துக் காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்!

  திமுக.,வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் இந்துக்கள் தங்களுக்கு தாங்களே வெட்டிக் கொள்ளும் சவக்குழி என்றும், தங்கள் சமாதியில் வைக்க எதிரிக்குத் தயாரித்துக் கொடுக்கும் மலர் வளையம் என்றும் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்!

  இந்நிலையில் வைணவ அறிஞர் எம் ஏ வேங்கடகிருஷ்ணன் கருத்தியல் ரீதியாக கி.வீரமணிக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்!

  திக தலைவர் வீரமணி பேசியதாக ஒரு வீடியோ கிளிப்பிங் வாட்ஸ் அப்பில் நான் பார்த்தேன். அதாவது கண்ணன் காலத்தில் கேமரா இருந்தால் தேவர்களுக்கெல்லாம் அதைப் போட்டுக் காட்டி இருப்பார் என்று வீரமணி சொல்கிறார்.

  எனக்கு என்ன சந்தேகம் என்றால் கிருஷ்ணனை இவர் ஒப்புக் கொள்கிறார்! கிருஷ்ணன் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்று சொல்லி வந்தவர் புராணங்களை பொய் என்று சொன்னவர்… இப்போது அந்த புராணத்தில் இருக்கும் பாத்திரங்களை உண்மை என்று ஒப்புக் கொண்டு கண்ணன் என்று ஒருவன் இருந்தான் அவன் இப்படிப்பட்ட நிலைகளை செய்தான் என்றும் அவன் தான் நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று சொன்னால்… அப்போது தேவர்களை இவர் ஒப்புக் கொள்கிறார்; கண்ணனை ஒப்புக் கொள்கிறார்!

  எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொள்கிறார்! கண்ணன் தான் இவர்களுக்கு வழிகாட்டி என்று வீரமணி சொல்கிறார்! உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதாவது கடவுள் உண்மை என்று ஒப்புக் கொண்டால் அதன் பிறகு திக.,வின் கொள்கை எல்லாம் அடிபட்டுப் போகிறது!

  எனவே மொத்தமே இவர் உளறிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது!  கண்ணனையே ஒப்புக்கொள்ளாதவர், கண்ணனின் லீலைகளை மட்டும் எப்படி ஒப்புக் கொள்வார் என்று எனக்கு புரியவில்லை

  இவருடைய நிலை என்ன என்று தெரியவில்லை! இப்படி தத்துபித்து என்று சொல்லிக் கொண்டு செல்வதற்கு எல்லாம் யார் காரணம் என்றால் திராவிடர் கழகத்தினர்! ஈவேரா என்ன சொன்னார்… பெண்களுக்கு கற்பு என்பது தேவையில்லை; யார் யாரை வேண்டுமானாலும் …  ஒருவனுக்கு ஒருத்தி என்று எதற்காக கொள்ள வேண்டும் ? கற்பு என்பதை யெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னவர் ஈவேரா!

  அப்படி இருக்கும்போது பொள்ளாச்சியில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கிறது என்றால் அதைச் செய்தவர்கள் ஈவேராவை பின்பற்றியவர்கள் தானே தவிர கண்ணனைப் பின்பற்றியவர்களாக இருக்க மாட்டார்கள்! அவர்கள் கண்ணனைப் பின்பற்றியிருந்தால் கீதையிலே சாத்வீகம் ராஜஸம் என்று எல்லாமே காட்டப்பட்டிருக்கிறது! அவற்றை பின்பற்றுபவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள் !

  அதாவது எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை எந்தக் கட்டுப்பாடும் இல்லை யாரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு கொள்கையைப் பரப்பி விட்டு… அந்த எல்லாவற்றையும் செய்துவிட்டு பிறகு ஏதாவது ஒருவன் செய்து விட்டால் அதற்கு காரணம் நானல்ல நீ என்று அடுத்தவர் மீது பழியை போட்டுவிட்டு செயல்படுகிறார்கள்!

  இது ஆத்திக மண். ஆழ்வார்கள் நாயன்மார்கள் பூமி. இது ஆன்மிக சக்தி படைத்த மண். இதை மாற்றுவதற்கு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது!

  எனவே பொள்ளாச்சி போன்ற  தவறுகள் நடப்பதற்கு மூலகாரணம் யார்? எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இப்படி தறிகெட்டுப் போகும் அளவிற்கு பிரசாரம் செய்து வருகின்ற இந்த நாத்திகர்களைத் தவிர  வேறு யாரும் அல்ல என்பதை உணர்ந்தால் அதுவே போதும்!

  1 COMMENT

  1. தி க வீரமணி இந்துக் கடவுள்களையும் புராணங்களையும் நம்பாதவர். கிருஷ்ணர் நடத்திய லீலை என்பது கிருஷ்ணர் சிறு பிள்ளையாக ஏழு வயது பாலகனாக இருந்தபோது செய்யப்பட்ட விளையாட்டு என்று எல்லாராலும் அறியப்படுகிறது. அதை ஏதோ ஒரு காமுக லீலையாக வீரமணி மட்டமான ரசனையுடன் சித்தரிக்கிறார். பொள்ளாச்சி வீடியோ கிருஷ்ணர் கையில் கிடைத்தால் அவர் எல்லா தேவர்களுக்கும் கொடுத்துவிடுவாராம். நல்ல மனிதனுக்கு தானே நல்ல சிந்தனை இருக்கும்? நாத்திகவாதிக்கு கடவுள் என்ன செய்தால் என்ன? வேறெந்த கடவுளையோ மதத்தையோ அல்லது மத தலைவரையோ இவ்வாறு இழிவு படுத்த வீரமணி துணிவாரா? கேடு நினைப்பான் கெடுவான்.

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,567FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-