சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவை நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, மெட்ரோ ரயில் போக்குவரத்து, அதிகாலை, 4:30 மணியில் இருந்து இரவு, 11:00 மணி வரை, விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த நீட்டிப்பில், அதிகாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, அரை மணி நேர இடைவெளியில், ரயில் இயக்கவும், பயணியர் வருகையையொட்டி, ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக ஷேர் ஆட்டோ, டாக்சி, மினிபஸ் சேவையும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் வாடகைக்கு விடும் வசதியும் செயல்பாட்டில் உள்ளது..




