October 20, 2021, 12:39 am
More

  ARTICLE - SECTIONS

  சிக்கிய ‘பணம் காட்டு’ சிறுத்தை! நேற்று உதார்! இன்று உதறல்! திரு ‘மணி’ வளவன்!

  thirumavalavan potsymbol - 1

  வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, பணம் கொடுத்துப் பெற வேண்டிய வெற்றி எனக்குத் தேவையுமில்லை என்று நேற்று ஒரு விவாத நிகழ்வில் திருமாவளவன் அறுதியிட்டு, உறுதியிட்டு, அடித்துக் கூறினார்.

  இன்று காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் காரை பெரம்பலூரில் சோதனையிட்டபோது, மிகவும் நூதனமாக கார் கதவுகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்ட இரண்டேகால் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று உதார் விட்டார்.. இன்று உதறல் எடுத்திருக்கிறது திருமாவளவனுக்கு!

  வேலூரில் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் 33 கோடி, விடுதலை சிறுத்தைகளிடம் 2 கோடி… என்று பணம் செலவழித்து வெற்றி பெறுபவர்கள் மக்களுக்குச் சேவை செய்வார்கள் என்று நம்பினால் நாம் மூடர்கள்தான்! பண விநியோகத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாவிடில், இத்தேர்தலைப் போல ஜனநாயகப் படுகொலை வேறொன்றில்லை… என்று கொதித்தெழுந்திருக்கிறார்கள் சமூகத் தளங்களில்!  இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது!

  இதற்குக் காரணம் பணம் பிடிபட்ட இடம், சிதம்பரம் தொகுதியில்! போட்டியிடும் வேட்பாளரோ, சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிய மாவீரர்! ஆயினும் வோட்டுப் பிச்சை கேட்டு திருவோட்டுப் பானை ஏந்தி நின்றது தில்லை சிதம்பரம் கோயிலில்!

  பெரம்பலூர் அருகே பேரளி டோல்வே பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான காவல்துறையை சேர்ந்த குழுவினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

  இரவு 10 மணி அளவில் திருச்சியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கோடிக்கணக்கில் பணம் கார் கதவுகளில் மறைத்து வைத்து கொண்டு செல்லப் பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அந்த காரினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

  அந்த காரில், பல்வேறு பகுதியில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் 2 பேர் திருச்சியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.

  இதை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. பின்னர் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  2 COMMENTS

  1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது, பண விநியோகத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படாவிடில், இத்தேர்தலைப் போல ஜனநாயகப் படுகொலை வேறொன்றுமில்லை.

  2. பிடிபட்ட இடம், சிதம்பரம் தொகுதியில்! போட்டியிடும் வேட்பாளரோ, சனாதனத்தை வேரறுக்கக் கிளம்பிய மாவீரர்! ஆயினும் வோட்டுப் பிச்சை கேட்டு திருவோட்டுப் பானை ஏந்தி நின்றது தில்லை சிதம்பரம் கோயிலில்!

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-