ஹிந்துஸ்தானத்தின் #மாமன்னர் மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம் இன்று ! வீர சிவாஜி 1630 ஆம் வருடம் பிப்ரவரி 19ல் பிறந்தார். 1680 ஏப்ரல் 3ஆம் தேதி ராய்கட் கோட்டையில் தமது 50ஆம் வயதில் மறைந்தார்.
மாவீரனான சத்ரபதி சிவாஜி யின் தாக்கத்தால், வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் அதே போன்ற ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது என்ற செய்தி நம்ப முடியாத அதிசயமான செய்தி தானே! என்றாலும் அது உண்மை தான்!
ஜெய் பவானி! ஜெய் சிவாஜி! என்ற முழக்கத்துடன் கொரில்லா போர் முறையை உலகத்துக்கு எடுத்துக்காட்டி, அதன் வெற்றிகரமான வடிவத்தை படிப்பித்தவர் வீர சிவாஜி. மிகப் பெரும் பலம் பொருந்திய மொகலாய படைகளை எதிர்த்து மிகச் சிறிய படையுடன் வெற்றி கொண்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய வீர சிவாஜியின் நினைவாகத்தான் வியட்நாம் நாட்டில் ஒரு சிலை வைக்கப் பட்டுள்ளது.
சைகோன் என்று பழைய நாட்களில் அழைக்கப்பட்ட இந்த நகரம் புரட்சி வீரன் ஹோசிமின் பெயரால் இப்போது அழைக்கப்பட்டு வருகிறது! சத்ரபதி சிவாஜி மஹாராஜா வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்!
அமெரிக்கா எனும் மாபெரும் மலையுடன் மோதிய சிறு குன்றாக வியட்நாம் இருந்தது. வியட்நாமியர்கள் வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாற்றால் உத்வேகம் பெற்றார்கள். சிவாஜி மகராஜாவின் போர் உத்திகளைத் தாங்கள் கைக் கொண்டார்கள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் வீர சிவாஜியின் கொரில்லா போர் உத்திகள் உள்புகுந்தன. அமெரிக்கப் படைகளை ஓட ஓட விரட்டினார்கள் வியட்நாமியர்கள்! அமெரிக்கா வியட்நாமில்தான் பெரும் அவமானத்தை சந்தித்தது.
ஆகவேதான் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவை கௌரவிக்கும் வண்ணம் சிவாஜி மகாராஜின் சிலை மாதிரியை நிறுவினார்கள் குதிரையில் அமர்ந்து கை உயர்த்திய கோலத்தில்.
சிவாஜியின் வீரத்தை ஹோ சி மின் மாவீரனில் உணர்ந்து, அவருக்கு சிவாஜியைப் போன்றே குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையையும் ஹோசிமின் நகரில் நிறுவினார்கள். வெளிநாட்டவர் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் இது! வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய #வீர_சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.