December 5, 2025, 8:39 PM
26.7 C
Chennai

வயிற்றுப் போக்கா.. எளிய முறையில் கைவைத்தியம்!

Diarrhea
Diarrhea

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பதனால் சரியாகும்.

கோடைகாலத்தில் மாதுளைப் பழமானது நிறையக் கிடைக்கும். மாதுளையின் ஜூஸ் மட்டுமல்ல அதன் விதை கூட வயிற்றுப்போக்கிற்கு நல்லது தான். வயிற்றுப்போக்கு ஏற்படும் போது மாதுளைப் பழம் ஜூஸ் குடித்தால் நல்லது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 டம்ளர் மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.

தேன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பாதுகாப்பான உணவாகும். தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

அஜீரணத்திற்கு இஞ்சி ஒரு மிகச் சிறந்த மருந்தாகும். இதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றுப்போக்கை நிறுத்தும். அரை டீஸ்பூன் சுக்குப் பொடியை மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி காய் வயிற்றுப்போக்கிற்கு நல்ல மருந்தாகும். பப்பாளி காயைத் துருவி மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அந்த கொதித்த நீரை வடிகட்டி சிறிது நேரம் கழித்து குடிக்க வேண்டும்.

ஒரு டம்ளர் மோரில் உப்பு, சிறிது ஜீரகப்பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கிற்கு நல்லது.

கொய்யா மரத்தில் உள்ள கொழுந்து போன்ற இலைகளை பறித்து நன்கு மென்று அந்த சாரை விழுங்கினால் உடனடியாக வயிற்றுப்போக்கு நின்று விடும். அதேபோல் கொய்யா பிஞ்சினை கடித்து நன்கு மென்று விழுங்கினால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

வெந்தயத்தில் அதிகப்படியான ஆன்டிபாக்டீரியல் குணம் இருக்கிறது. வீட்டு வைத்திய முறை அனைத்திலும் வெந்தயம் நிச்சயம் இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்துக் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

தவிர்க்க வேண்டியவை
பால் மற்றும் பால் சார்ந்த எந்த உணவுப்பொருட்களையும் உட்கொள்ளாதீர்கள்.

எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் உறிஞ்சும் பஞ்சி, போண்டா போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் உறிஞ்சும் பஞ்சி, போண்டா போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.
காரமான உணவுகளை சாப்பிடாதீர்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்.

காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக உட்கொள்ளாதீர்கள். சிட்ரஸ் வகைப் பழங்களும் வயிற்றுப்போக்கை தீவிரமாக்கும். வெங்காயம் மற்றும் பூண்டு வயிற்றுப்போக்கிற்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்பதால் அதையும் தவிருங்கள். ஏற்கெனவே வயிற்றுப்போக்கு என்பதால் நார்ச்சத்து உணவுகளை தவிர்ப்பது நல்லது. காஃபி , சோடா மற்றும் இதர கார்போனேட் பானங்களை அருந்தாதீர்கள். மது அருந்துவதும் கேடு தரும்.

வெந்தயம் குளிர்ச்சியானது. வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு கப் கெட்டி பசுந்தயிரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூளை கலந்து குடித்தால் போதும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இப்படி கொடுத்தாலே போதும்.

வெந்தயத்தை வறுத்து பொடித்த தூளுடன் இரண்டு மடங்கு அளவு வெல்லம் சேர்த்து கலந்து உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் போதும்.

மாதுளம் பழத்தின் தோலை உலரவைத்து பொடியாக்கி குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு அதிகமாக இருக்கும் போது அதை பாலில் கலந்து கொடுப்பார்கள். அப்படி கொடுத்தால் வயிற்றுபோக்கு குணமடையும்.

சீதபேதி இருக்கும் போது மாதுளம் பிஞ்சை எடுத்து எதையும் சேர்க்காமல் அப்படியே அதை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்துகொள்ளவும்.

தினம் மூன்று உருண்டைகள் வீதம் தொடர்ந்து 5 நாட்கள் வரை உட்கொண்டால் நாட்பட்ட சீதபேதியும் காணாமல் போகும்.சிறு பிள்ளைகளுக்கு இதை அரைத்து மோரில் கலந்தும் குடிக்க செய்யலாம்.

அத்திக்காய் போன்று அத்தி மரத்தின் இலை, பிஞ்சு காய், அத்திப்பழம், உலர்ந்த அத்திபழம் அனைத்துமே மருத்துவக்குணங்களை கொண்டிருக்ககூடியது. அத்திமரத்தின் பட்டை கூட மருத்துவத்தில் பயன்படக்கூடியது. அத்திமரத்திலிருந்து பெறப்படும் பாலை எடுத்து அதனுடன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இனிப்புக்கு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சீதபேதி குணமாகும். தீவிர சீதபேதி கூட குணமாகும்.

நாவல் மரத்தின் இலைகளும் சீதபேதிக்கு நல்மருந்தாக அமையும். இவை எளிதில் பழங்களோடு கிடைத்துவிடும் என்பதால் இலையை தேடி ஓடவேண்டியதில்லை. இந்த இலையுடன் கொய்யா இலையை (கொழுந்தாக இருக்ககூடிய) சேர்த்து கொள்ளவும். இரண்டு இலைகளின் கொழுந்தை நறுக்கி எடுத்து பாத்திரத்தில் சேர்த்து நீர்விட்டு கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் போதும். தினமும் மூன்று வேளை குடித்துவரவேண்டும். மலத்தில் இரத்தம் கலந்துவரும் சீதபேதியை குணப்படுத்தும்.

உடனடி ஆற்றல் தரக்கூடியவற்றில் ஜாதிக்காய் முக்கியத்துவம் வாய்ந்தது. இனிப்புச்சுவையுடன் கூடிய ஜாதிக்காயை பொடித்து கொள்ளவேண்டும். குடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை முழுவதும் நீக்ககூடிய தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு.

வயிற்றுபோக்கு இருக்கும் நேரத்தில் பால் குடிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் சீதபேதி காலங்களில் கால் டம்ளர் பாலில் ஜாதிக்காய் பொடி கால் டீஸ்பூன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி குணமாகும்

வசம்பு இதை பிள்ளை வளர்த்தி அல்லது பெயர் சொல்லாத பொருள் என்று சொல்வார்கள். வசம்பை வாங்கி விளக்கெண்ணெய்யில் நனைத்து சுட்டு கொள்ள வேண்டும். வசம்பை தேனில் குழைத்து நாக்கில் தடவி கொண்டால் சீதபேதி பட்டென்று நிக்கும். சீதபேதியுடன் வயிறு வலியும் அதிகமாக இருக்கும் போது வசம்பை சுட்டு தாய்ப்பாலில் குழைத்து தொப்புளை சுற்றி பற்று போடுங்கள். சீதபேதியால் உண்டாகும் வயிறுவலியும் தீரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories