தெலங்காணா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் நீங்கல் வெளியில் செல்ல வேண்டுமா? அதற்கு பாஸ் வாங்க வேண்டுமென்றால்… நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்… என்னவெல்லாம் தெரியுமா?!
ஹைதராபாதில் லாக்டௌன் சமயத்தில் வெளியில் செல்ல வேண்டும் என்று அவசியம் ஏற்பட்டால்.. தேவை ஏற்பட்டால்… இப்போதுவரை ஏதோ ஒரு சாக்கு சொல்லி உள்ளூரிலேயே திரிந்து வந்தார்கள் சிலர். ஆனால் லாக்டௌன் நிபந்தனைகளை மீறினால் தண்டனை கிடைத்தே தீரும் என்று ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனீ குமார் குமார் எச்சரித்துள்ளார்.
தற்போது ஸ்பெஷல் டிரைவ் கடைபிடிக்கப் போவதாகவும் ஒவ்வொரு வாகனத்தையும் பரிசோதனை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் போலீசார் கொடுத்த பாஸ்களை மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்றும் அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து பாஸ்களை ரத்து செய்வதோடு கூட வாகனங்களை சீஸ் செய்வோம் என்றும் கூறினார். இப்போதுவரை செக் போஸ்ட்களின் அருகில் நடந்த பரிசோதனைகள் மூலம் சுமார் 500 க்கும் மேலாக வாகனங்களை சீஸ் செய்துள்ளதாகக் கூறினார் சிபி.
உண்மையாகவே தேவை இருக்கும்போது அவர்கள் இனி ஆன்லைனில் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். அதற்காக போலீஸ் துறை பிரத்தியேக ஏற்பாடு செய்துள்ளது. அதற்காகவே பிரத்யேகமாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பாஸை பெற வேண்டும் என்றால் முதலில் வீடியோவில் கூறியுள்ளபடி வெப்சைட்டுக்குள் சென்று அப்ளிகேஷன் ஃபார்மை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின் போட்டோ, ஆதார் கார்டு இணைக்க வேண்டும். அதனை முழுமையாக பரிசீலித்து பத்தே நிமிடங்களில் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் அப்ரூவ் செய்வார்கள். அது குறித்து நம் மொபைல் நம்பருக்கு மெசேஜ் ஆக வரும். அதன் பின்னர் லிங்க் ஓபன் செய்து பார்ம் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
முழு விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.