ஈஸியா டேஸ்டியா ஒரு சீஸ் ஊத்தப்பம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
tomato uthappam - 2026

தக்காளி சீஸ் ஊத்தப்பம்

தேவையானவை:
இட்லி மாவு – 2 கப்,
துருவிய சீஸ் – 4 டேபிள்ஸ்பூன்,
பெங்களூர் தக்காளி – 2,
நறுக்கிய குடமிளகாய் – 4 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
சமையல் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பெங்களூர் தக்காளியைப் பொடியாக நறுக்கி ஒரு கப்பில் போட்டு, அத்துடன் நறுக்கிய குடமிளகாய், துருவிய சீஸ், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் போட்டு கலந்து வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து எண்ணெயை லேசாகத் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி கப்பில் உள்ள கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து அதன் மேலே தூவி, ஓரங்களில் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.