வெக்கை தாங்கலப்பா.. ஒரு தக்காளி மில்க்‌ஷேக் குடிக்கலாமா?

சமையல் புதிது நலவாழ்வு பொது தகவல்கள்
tomato milkshake - 2026

தக்காளி மில்க்‌ஷேக்

தேவையானவை:

நன்கு பழுத்த நாட்டுத்தக்காளி – 4,
சர்க்கரை – கால் கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, பாதியளவு அரை பட்டதும் சர்க்கரை சேர்த்து, முழுவதுமாக அரைபட்டதும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடிக்கவும். பிறகு, பாலையும் ஊற்றி ஒரு அடி அடித்து கலக்கிவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பருகவும். குளிர்ச்சி தேவை இல்லையெனில், ஃப்ரிட் ஜில் வைக்காமலே பருகலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.