சுவிட்சர்லாந்துக்கு ஆந்திராவிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி… திருப்பதியில் இருந்து 1.2 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்த ஏபி ஆக்ரோஸ் பேக் நிறுவனம்.
பொருளாதார அமைப்புக்கு இது நல்ல செய்தி என்கிறார்… அமைச்சர் மேகபாடி கௌதம்ரெட்டி.
லாக்டௌன் நேரத்தில்கூட விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் மாநில அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருப்பதி ஏபி அக்ரோஸ் பேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கு 1.2 டன் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் ஏற்றுமதி செய்துள்ளார்கள்.
மாநில தோட்டத் துறையின் உதவியோடு விவசாயிகள், வியாபாரிகள் ஒன்றிணைந்து ஏபி அக்ரோஸ் பேக் நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். மாநிலத்தில் விளையும் பல்வேறு பழங்கள், காய்கறிகளை இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் டன்களுக்கு மேலாக மாம்பழங்கள் விளைச்சல் இருப்பதால் அதில் ஆயிரம் டன்கள் வரை அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். முக்கியமாக பங்கனப்பள்ளி, ஸ்வர்ண ரேகா, அல்போன்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள்.
லாக்டௌன் நேரத்தில் பொருளாதார அமைப்பு நிறைவாக உள்ளது என்று கூறுவதற்கு இது ஒரு சுபச்செய்தி என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபாடி கௌதம்ரெட்டி ட்விட் செய்துள்ளார்.