
பிரபல உபய வேதாந்த பண்டிதர் கொடிசெர்ல பாண்டுரங்காசார்யுலு (102) ஹைதராபாதில் திங்கட்கிழமை மாலை காலமானார்.
அவர் வேத சாஸ்திரத்தில் நிபுணர். சம்ஸ்கிருத சாகித்தியத்தில் அறிஞர். கிருஷ்ண யஜுர் வேதத்தில் கனாபாடியாக மிகப் பெரும் புகழ் பெற்றவர். அவர் வெமுலவாடா என்ற நகரில் நீண்ட காலம் முன்பு சம்ஸ்கிருத வேத உபன்யாசகராக பணியில் இருந்தார்.
மகபூப் நகரைச் சேர்ந்த இவர் சுமார் 20 ஆண்டுகள் மைசூரைச் சேர்ந்த பரகால மடத்தின் 33வது ஜீயர் ஸ்வாமி ஸ்ரீ அபிநவ ரங்கநாத பிரம்ம தந்திர ஸ்வதந்த்ர ஜீயர் சுவாமியிடம் வேத சாஸ்திரம் அத்யயனம் செய்துள்ளார்.
பாண்டுரங்காச்சார்யுலு மரணம் குறித்து தெலங்காணா முதல்வர் கேசிஆர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரியச் செய்தார்.
வேமுலவாடாவைச்சேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர்கள் அஷ்டாவதானி திகள்ள ஶ்ரீஹரிசர்மா, நமிலகொண்ட ஹரிப்ரசாத், ராஜன்னா, கோட்டன்னா, ஶ்ரீனிவாஸ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்தனர்.