
76 வருடங்களாக நீரோ உணவோ தொடாத யோகி 90 வயதில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவருடைய ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்கு முயற்சித்து தோல்வியுற்றார்.
76 வருடங்களாக உணவோ நீரோ தொடாமல் விஞ்ஞானத்திற்கு சவால் விட்ட 90 வயது யோகி பிரகலாத் ஜனி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
குஜராத் மெஹசானா மாவட்டம் சரோடு கிராமத்தைச் சேர்ந்த பிரஹலாத் ஜனி வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்து வந்தார். பக்தர்கள் அனைவரும் அவரை சுர்னிவாலா மாதாஜி என்றழைப்பார்கள்.
மருத்துவர்களின் பரிசோதனைகளுக்கு கூட உட்பட்டு அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவரைப் பற்றி இப்போது வரை எத்தனையோ பரிசோதனைகள் நடந்தன. ஆனால் அந்த ரகசியத்தை யாரும் கண்டறிய முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட இவருடைய ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்று முயற்சித்து தோல்வி அடைந்தார்.
2010ல் டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸியாலஜி அண்ட் அலைட் சயின்ஸ்ஸ், டிபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் போன்ற அமைப்புகள் பிரஹலாத் ஜனி மீது முழுவதுமாக அறிவியல் பரிசோதனை நடத்தினார்கள். அவரை 15 நாட்கள் தனிமையில் இருத்தி சுற்றிலும் கேமராக்களை பதித்து அவருடைய வாழ்க்கை முறையை கண்காணித்தார்கள்.

மருத்துவத்துறையின் வசதியில் உள்ள அல்ட்ரா சவுண்டு எம்ஆர்ஐ சீடிஸ்கேன் போன்ற அனைத்து வித நவீன உபகரணங்களையும் அவர் மீது பிரயோகித்து ஆராய்ச்சி செய்தார்கள். இறுதியில் அவர் சாதாரண மனிதர் இல்லை என்று அறிவித்தார்கள். பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்ளும் குணங்கள் அவரிடம் இருக்கின்றன என்று அறிந்து கொண்டார்கள்.
இந்த யோகியின் உடலை இரண்டு நாட்கள் ஜனஸ்கந்தத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்தில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்போகிறார்கள். வியாழக் கிழமை மே 28 அதே ஆசிரமத்தில் அந்திமக் கிரியைகள் நடத்தப் போகிறார்கள்.
உணவு இல்லாமல் இத்தனை ஆண்டுகள் வாழ்வதன் பின்னால் உள்ள ரகசியத்தை பற்றி இந்த யோகி பாபா என்ன சொன்னார் என்று அறிந்து கொள்வதற்கு இந்த கீழே உள்ள கதையைப் படியுங்கள்.
அவரை ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் அவரைப் பற்றிய ரகசியத்தை எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் போனார்கள். இறுதியில் அவருடைய ஆசிரமத்தில் உள்ள செடிகளை கூட ஆராய்ச்சி செய்தார்கள்.
ஒரு நாள் உணவு இல்லாமல் போனாலே பசியோடு துடி துடித்துப் போகிறோம்.
ஆனால் அவர் கடந்த 76 ஆண்டுகளாக உணவின்றி நீரின்றி வாழ்ந்து வந்தார். நம்பிக்கை ஏற்படவில்லை அல்லவா? ஆனால் நாம் தவறாமல் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
குஜராத் மெஹசானா மாவட்டம் சரோட் கிராமத்தைச் சேர்ந்த 89 வயது பிரகலாத் ஜனிக்கு உணவு நீர் தேவை இல்லை. வெறும் மூச்சுக் காற்றினால் அவர் உயிர் வாழ்ந்தார். ஆனால் அது எவ்வளவு வரை சாத்தியம் என்று தெரிந்து கொள்வதற்கு வைத்தியர்களும் பரிசோதனை செய்பவர்களும் அவர் மீது செய்யாத ஆராய்ச்சியே இல்லை எனலாம்.
முன்னாள் ஜனாதிபதி பிரபலமான விஞ்ஞானி அப்துல் கலாம் கூட பிரகலாத் ஜனி மீது பரிசோதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெறும் சுவாச காற்று மட்டுமே எடுத்துக் கொண்டு எவ்வாறு வாழ்ந்தார் என்று அறிந்து கொள்வதற்கு சில சாஸ்திர ஆராய்ச்சி யாளர்கள் அவருடைய ஆசிரமத்தில் உள்ள செடிகளின் மீது கூட பரிசோதனைகள் நடத்தினார்கள். இறுதியில் யாருமே அவருடைய இரகசியத்தை அறிந்துகொள்ள முடியாமல் போனார்கள்.
பிரகலாத் அம்பாஜி மாதாவை வணங்குபவர். அம்பாவின் தீவிரமான பக்தர்.
15 நாட்கள் நடந்த பரிசோதனைகள்: 2010 ல் டிபென்ஸ் இன்ஸ்டீடியூட் ஆஃ பிஸியாலஜி அண்ட் அல்லைட் சயன்ஸ்ஸ், டிபென்ஸ் ரிசர்ச் அண்ட் தேவலப்மன்ட் ஆர்கனைசேஷன் போன்ற அமைப்புகள் முழுவதுமாக பரிசோதனை நடத்தினர். அவரை 15 நாட்கள் தனிமையில் இருத்தி சுற்றிலும் கேமராக்களை வைத்து அவருடைய வாழ்க்கை முறையை கண்காணித்தார்கள்.
அதுமட்டுமின்றி மருத்துவத்துறையில் உபயோகத்தில் உள்ள அல்ட்ரா சவுண்டு எம்ஆர்ஐ சிடி ஸ்கேன் போன்ற அனைத்து வித நவீன பரிசோதனை கருவிகளையும் அவர் மீது பிரயோகித்தார்கள். இறுதியில் அவர் சாதாரண மனிதன் அல்ல என்று தெரிந்து கொண்டார்கள். பசி தாகத்தைப் பொறுத்துக் கொள்ளும் குணம் அவரிடம் உள்ளது என்று புரிந்துகொண்டார்கள்.
இத்தனை ஆண்டுகள் சாப்பாடு இன்றி தண்ணீர் குடிக்காமல் எவ்வாறு வாழ்கிறார் என்ற கேள்விக்கு இவ்வாறு அந்த யோகி பதில் அளித்தார். அது வெறும் தியானத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறினார்.
அவருடைய சக்தியைப் பற்றி அறிந்து கொண்ட பல பக்தர்கள், பிரமுகர்கள் அவருடைய ஆசிரமத்திற்கு வருகை தருவது வழக்கம். அவர்களுள் பிரதம மந்திரி நரேந்திர மோடி கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.
100 கிலோ மீட்டர் நடந்தாலும் அவருக்கு சோர்வே இருக்காது. தான் ஒரு பருக்கை சாதமும் ஒரு துளி நீர் கூட எடுத்துக் கொள்வதில்லை என்று பிரஹலாத் கூறினார். சில முறை காடுகளில் 100லிருந்து 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து விடுவேன் என்றும் கூறினார். தனக்கு எப்படிப்பட்ட சோர்வு கூட வராது என்றும் வியர்வை வராது என்றும் கூறினார். தினமும் தான் 3 லிருந்து 12 மணி நேரங்கள் வரை தியான முத்திரையில் இருப்பேன் என்று கூறினார். அவருடைய வாழ்க்கை அசாதாரணமான வாழ்க்கை முறை.
ஒரு மனிதர் நீர் இல்லாமல் ஒரு வாரமோ உணவில்லாமல் சில மாதங்களோ கூட உயிரோடு இருக்கலாம். ஆனால் இவ்வாறு ஆண்டுக்கணக்காக உணவோ நீரோ இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உணவு நீர் இல்லாவிட்டால் உடலில் உள்ள அவயவங்கள் அடி பட்டுவிடும். சிலர் தீவிரமாக நோய்வாய்ப் படுவார்கள். இதன் மூலம் உயிர் போகும் ஆபத்து கூட உள்ளது. ஆனால் பிரகலாதிடம் மாத்திரம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழ்நிலைகளும் மருத்துவர்களுக்கு தென்படவில்லை.
எதுவும் ஆகாரம் எடுத்துக் கொள்ளாமலேயே எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஒரு பெண்ணைப் போல் ஆடை அணிவார்:
தான் ஏழு வயதாக இருக்கும்போதே ராஜஸ்தானில் உள்ள தன் குடும்பத்தை விட்டு காட்டு வழியில் நடந்தேன் என்று தெரிவித்தார். பதினோராவது வயதில் தான் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து அம்பாஜி தேவதையை வணங்குவதை தொடங்கியதாகவும் கூறினார்.
அந்த வழிபாட்டால் தானும் கூட பெண்ணைப் போல் உடை அணிவதை பழக்கப்படுத்திக் கொண்டதாக கூறினார். அம்பாஜி தேவதையைப் போலவே தானும் மூக்கிற்கு வளையமும் கைகளுக்கு வளையல்களும் தலையில் பூவும் அணிந்து கொண்டதாக கூறினார். அம்பா தேவதை போலவே தானும் உணவோ நீரோ எடுத்துக்கொள்ளாமல் இத்தனை ஆண்டுகள் வாழ முடிந்தது என்று தெரிவித்தார். ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் பிரகலாத் ஜனியை சுர்னிவாலா மாதாஜி என்று அழைப்பார்கள் .
அது ஒரு பெரிய மர்மம்:
குஜராத்தில் உள்ள அம்பாஜி ஆலயத்தின் சமீபத்தில் ஒரு குகையில் வசித்து வந்த பிரகலாத் விடியற்காலையிலேயே தூங்கி எழுந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். அதன்பின் ஆலயத்திற்கு வரும் பக்தர்களோடு உரையாடி விட்டு மீண்டும் தியானத்தில் அமர்ந்து விடுவார். அது பற்றி அறிந்து கொண்ட மருத்துவர்கள் அவர் மீது எத்தனையோ பரிசோதனைகளை நடத்தினார்கள்.
முதன்முதலாக 2003ல் அகமதாபாத்தைச் சேர்ந்த நியூராலஜி கன்சல்டன்ட் டாக்டர் சுதீர் ஷா பிரகலாதை பரிசோதனை செய்தார். ஒரு கண்ணாடி அறையில் பிரகலாதை வைத்து சிசிடிவி கேமராக்களை ஏற்பாடு செய்தார். இறுதியில் டாய்லெட்டைக் கூட மூடி வைத்து விட்டார்கள். உதடுகளை நனைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிதளவு நீர் மட்டுமே வைத்தார்கள். இவ்வாறு அவரை 10 நாட்களாக பரிசோதனை செய்தார்கள்.
பிரகலாத் அங்கிருந்து நகராமல் ஒரு துளி நீரும் அருந்தாமல் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் பிரகலாத் வாழ்க்கை முறை இன்று வரை புரிபடாத ரகசியமாகவே உள்ளது.