திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

Published:

1001382561 - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திமுக வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது காவல்துறை.போலீஸ் விசாரணையில் வேட்பாளர் மருமகள் தனது கள்ளக்காதலனுடன் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்.இவர் கடந்த 14ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாத்தூர் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (40) என்ற நபர் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோவை சாத்தூர் நகர் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி காவல்துறையினரை தலைகிறங்க வைத்துள்ளது.

விசாரணையில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜின் மூத்த மகனான வினோத் குமாருக்கும் அவரது மனைவி அபிநயாவுக்கும் (30) கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிநயா தனது தோழி பவானியின் கணவரான சுரேஷ் குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருவதாக தெரிகிறது.

இதனிடையே அபிநயா திருமணத்தின் போது சீர்வரிசையாக கொண்டு வந்த 35 சவரன் நகையை வேட்பாளர் கடற்கரை ராஜ் திருப்பி தர மறுத்ததால் அபிநயா, சுரேஷ்குமார் அவரது மனைவி பவானி (30)
ஆகிய 3 பேரும் ஆளில்லாத நேரத்தில் கடற்கரைராஜ் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு கூலிக்காக ஆரோக்கிய ஜான் போஸ்கோ உள்ளிட்ட 3 பேரை அழைத்து கொள்ளையில் ஈடுபட வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து தற்போது திமுக வேட்பாளர் கடற்கரைராஜின் மருமகள் அபிநயா 30, சுரேஷ்குமார் 31,அவரது மனைவி பவானி 30, ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

மேலும் கைது செய்யப்பட்ட வேட்பாளரின் மருமகள் அபிநயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுரேஷ்குமார் என்பவருடன் வாழ்ந்து வருவதாகவும் திருமணத்தின் போது தான் கொண்டு வந்த நகைகளை கணவர் வீட்டார் தர மறுத்ததாகவும் ஆதனால் திமுக வேட்பாளராகிய தனது மாமனாரை பழிவாங்கவே கூட்டாக சதித்திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img