
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை , குப்பையில் வீசப்படுவதும் , புதை குழியில் தூக்கி எறியும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் 13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடல்கள் வேனில் இருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது.
அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டு போட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுபவர்களின் உடல்களை ஊழியர் ஒருவர் கழுத்தில் கயிற்றை கட்டி தர, தர இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றும் கொடுமையான காட்சியை, ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று 21 பேரின் உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு மேற்கு வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு கவர்னர் ஜகதீப் தங்கர் இறந்த மனித உடல்களை எப்படி இழிவாக நடத்துவது மனிதகுலத்தை வெட்கப்படச் செய்கிறது என்று அவர் கூறினார். அந்த உடல்கள் கொரோனா நோயாளிகளின் உடல்கள் அல்ல , மருத்துவமனை பிண அறையில் உரிமை கோரப்படாத , அடையாளம் காணப்படாத உடல்கள் என்று மேற்கு வங்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
तस्वीरें विचलित कर सकती हैं-कोलकाता नगर निगम 13 बुरी तरह सड़े हुए शवों को जलाने के लिए न्यू गोरिया श्मशान घाट लाया, उनसे तेज़ दुर्गंध उठ रही थी,स्थानीय निवासियों के विरोध के चलते लाशों को वापस ले जाना पड़ा, शवों के साथ अमानवीय और शर्मनाक व्यवहार, सरकार के असभ्य रवैये का प्रतीक है pic.twitter.com/f7PWS1Y7O3
— Vikas Bhadauria (ABP News) (@vikasbha) June 11, 2020