- நட்ட நடு ரோடில் சுருண்டு விழுந்த இளைஞன்.
- உடனேயே நிகழ்ந்த மரணம்.
- அதிர்ச்சியில் விலகி ஓடிய மக்கள்
- மனிதாபிமானத்தை தோற்கடித்த கொரோனா!
நட்ட நடு ரோட்டில் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஹைதராபாத்தில் உள்ள ஈசிஐஎல் சௌராஸ்தாவில் இன்று மதியம் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். ஆனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த யாருமே உதவிக்கு வரவில்லை.
மூன்று நாட்களாக ஜுரத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜவஹர் நகரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற இளைஞன் ஈசிஐஎல் அருகிலுள்ள குஷைகுடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறி காந்தி மருத்துவமனைக்குச் செல்லும் படி அறிவுறுத்தினார்கள்.
அவன் வெளியில் வந்து ஆட்டோவில் ஏற முயற்சித்தபோது சுருண்டு நடுரோட்டில் விழுந்துவிட்டான். அதன் பிறகு சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அவனுடைய உறவினர்களும் விஷயம் தெரிந்து ஓடி வந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் மரணித்துவிட்ட சங்கதி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
திடீரென்று இளைஞன் கீழே மயங்கி விழுந்து உடனே மரணமடைந்தது உறவினர்களை துடிக்கச் செய்தது.
ஆனால் கொரோனா கிருமி பரவும் அபாயத்தால் மனிதாபிமானத்தை இழந்த சுற்றுப்புறத்தில் இருந்த அத்தனை மனிதர்களும் பார்த்துக் கொண்டே இருந்தார்களே தவிர நடு ரோட்டில் மயங்கி விழுந்த இளைஞனுக்கு உதவ எவருமே முன்வரவில்லை.
ஓர் இளைஞன் சுருண்டு விழுந்தாலும் அதை கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை வற்றச் செய்து கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!