October 21, 2021, 12:46 pm
More

  ARTICLE - SECTIONS

  இறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்? ஆச்சாரியாள் அருளமுதம்!

  abinav vidhya theerthar

  பக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா?

  இது சாதாரணமாக பலரால் அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி இக்கேள்விக்கான பதிலை பிரபலமான ஒரு ஸ்லோகத்தில் காணலாம்

  அணி இலக்கணத்தோடு கூடிய அந்த ஸ்லோகம் அந்த பதிலை சில கேள்விகள் மூலமாக நமக்கு அளிப்பது சுவாரசியமானது

  தர்மவியாதன் தொழில் என்ன என்ற கேள்வியுடன் ஸ்லோகம் ஆரம்பிக்கின்றது தர்மவியாதன் என்பவன் கசாப்புக்காரன் ஐயமின்றி பெற்றவர்களுக்கு சேவை புரிவதே தனது கடமை என எண்ணி அவர்களை அன்புடன் காப்பாற்றிக் கொண்டு வந்தான்.

  அதனாலே தர்ம வழியில் நடக்கும் ஒரு உத்தமன் என்று எல்லோரும் அவனைப் பாராட்டினார்கள். மகாபாரதத்தில் இவனைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. தனது தவத்தின் பலனாக ஒரு பிரம்மச்சாரிக்கு விசேஷமான சக்திகள் பல தோன்றின பறவை ஒன்று பறந்து கொண்டிருந்தது அப்போது அதனுடைய எச்சமானது அவன் தலை மீது விழுந்தது இதனால் கோபம் கொண்ட அவன் அந்தப் பறவையை முறைதான். உடனே பறவை எரிந்து சாம்பலானது.

  இந்த யோக சக்தியின் மகிமையை கண்டு அவனுக்கு கர்வம் தலைக்கு ஏறியது ஒரு நாள் பிக்ஷ்க்காக ஒரு வீட்டின் வாசலில் நின்றான் வீட்டுப் பெண்மணி வெளியே வந்து பிரம்மச்சாரி பார்த்து நான் என் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருக்கிறேன் அதனால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக்கொண்டாள்

  abinav vidhya theerthar

  அவளது வார்த்தைகள் அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணின. ஆனால் அவள் அமைதியுடன் அவனை நோக்கி நீங்கள் பார்த்ததும் இருந்து சாம்பல் ஆவதற்கு நான் ஒன்றும் பறவை இல்லை என்று பதிலளித்தாள். ஒரு காட்டிற்குள் நடந்த தனக்கு மட்டுமே தெரிந்த சம்பவம் அவளுக்கு எப்படி தெரியவந்தது என்று எண்ணிய பிரம்மச்சாரி வியப்பில் ஆழ்ந்தான்.

  அவனது கர்வம் அழிந்து தனது சந்தேகத்தை அவளிடம் கேட்டான் அதற்கு அவள் தர்மவியாதனிடம் சென்று கேட்குமாறு கூறினாள்

  தர்மவியாதன் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி பிரம்மச்சாரிக்கு விரிவாக எடுத்துரைத்தார் தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய தனது கடமையை முற்றிலும் மறந்து அந்த பிரம்மச்சாரி அவர்களை புறக்கணித்ததால் தர்மவியாதன் கூறிய உபதேசம் அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது கசாப்பு தொழில் பலரால் இழிவாக பார்க்கப்பட்ட போதிலும் அத்தொழிலை மேற்கொண்ட தர்மவியாதன் உயர்வாக பார்க்கப்பட்டான்

  இறைவன் தமது பரிபூரண ஆசீர்வாதங்களைப் அவனுக்கு வழங்கினார் பக்தி மார்க்கத்தில் செல்வதற்கு ஒருவனுடைய தொழில் எந்தவிதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

  நாம் வயதைப் பற்றி பார்ப்போம் ஒரு பக்தனாக இருப்பதற்கு ஏதேனும் வயது வரம்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஒரு ஸ்லோகம் துருவனின் வயது என்ன என்பது துருவன் தந்தை உத்தானபாதன் இரண்டு மனைவிகள். துருவனின் மாற்றாந்தாய் ஸ்ருசீ க்கு அவனை பிடிக்கவில்லை ஒரு சமயம் துருவன் தனது தந்தையின் மடியில் உட்கார சென்றான். சுருசி அதை தடுத்தாள் தனது மகனை தான் உத்தானபாதன் கொஞ்ச வேண்டும் என்று கூறினாள் இதனால் வருத்தமடைந்த துருவன் அழுது கொண்டே தனது தாயிடம் சென்று விஷயத்தைத் தெரிவித்தாள் துரதிஷ்டவசமாக சிறுவனின் கவலை நீக்க முடியாத நிலையில் இருந்தாள் சுநீதி. எனவே அவள் இறைவனிடம் சென்று தவம் புரியுமாறு கேட்டுக் கொண்டாள்

  தாய் சொல்லை ஏற்று மனதில் உறுதியுடன் காட்டிற்கு சென்றான் துருவன். நாரத முனிவர் வழியில் அச்சிறுவனை கண்டார். அவனுக்கு நீ சிறுவன் தவம் என்பது கடினமானது காட்டில் மிருகங்கள் வரும் நான் உன் தந்தையிடம் சொல்லி உன்னை மடியில் அமரச் செய்கிறேன் என்றெல்லாம் கூறி பார்த்தார் ஆனால் அவன் மறுத்து தன் தவத்தில் உறுதியாக நின்றான் அவனது பக்தியும் மன உறுதியும் கண்டு மனம் மகிழ்ந்த நாரத பகவான் ஸ்ரீமன் நாராயணனை உபாசிக்கும் வழிமுறைகளை அவனுக்கு உபதேசித்து அருளினார்.

  நாரதரின் உபதேசத்தை நன்கு மனதில் வாங்கிக் கொண்டு ஸ்ரீமன் நாராயணனை துதித்து தியானத்தில் அமர்ந்தான் அவனது அளவு கடந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் அவன் முன் தோன்றினார். தனது தந்தையை வெற்றி பெறுவான் என்றும் வருங்காலத்தில் மிகப்பெரிய அரசனாக அவன் ஆவான் என்றும் இறைவன் அவனுக்கு வரம் அளித்தார். அவன் இறந்த பிறகு வானில் வடதுருவத்தில் துருவ நட்சத்திரமாக ஒளி வீசிக் கொண்டே இருப்பான் என்றும் அவனை ஆசீர்வதித்தார். இறைவனை காணும் போது அவன் சிறு பாலகன் பக்தி மார்க்கத்தை கடைப்பிடிப்பதற்கு வயதிற்கான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்பது இதிலிருந்து விளங்கும்.

  பக்தி செய்வதற்கு பாண்டித்யம் அவசியமா என்பது அடுத்த கேள்விக்கு பதில் கஜேந்திரனுக்கு என்ன படிப்பு இருந்தது கஜேந்திரன் ஒரு யானை அது காட்டில் வாழ்ந்து வந்தது இறைவனின் உன்னத பக்தன் ஆகும் ஒரு சமயம் நீர் அருந்துவதற்காக தடாகத்திற்கு சென்றபோது அங்கிருந்த முதலை காலைப் பிடித்துக் கொண்டது இருவருக்கும் பல நாட்கள் மிகக் கடுமையாக சண்டை நடந்தது மெல்ல மெல்ல முதலை யானையினை ஜெயிக்கும் நிலைக்கு வந்தது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இறைவனை உரக்கக் கூவி அழைத்தது யானை. காப்பாற்றுமாறு வேண்டியது மகாவிஷ்ணு அங்கு தோன்றி தனது சக்ராயுதத்தால் முதலையை அழித்து யானைக்கு மோட்சம் அளித்தார் படிப்பறிவே இல்லாத கஜேந்திரன் என்னும் யானை வெறும் தனது பக்தியால் இறைவனின் கருணையை பெற்றது எனவே இறைவன் பக்தி செய்வதற்கு பாண்டித்தியம் தேவையில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.

  பக்தி செய்ய உயர்ந்த குலத்தில் பிறந்து இருக்கவேண்டுமா இக்கேள்விக்கான பதில் விதுரர். விதுரரின் தாழ்ந்த ஜாதியினர் ஒரு வேலைக்காரியின் மகன் நிச்சயமாக உயர்ந்த குலத்தில் பிறந்தவர் இல்லை பாண்டவர்களின் பிரதிநிதியாக கிருஷ்ணர் அஸ்தினாபுரம் சென்றபோது தங்குவதற்கு கௌரவ இளவரசர்கள் அவருக்கு தங்கள் அரண்மனைகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு விதுரரின் மிக எளிமையான வீட்டில் தங்கினார். விதுரருக்கு கிருஷ்ணர் இடத்திலிருந்த பக்தியை இதற்கு காரணம். தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் பக்தி மார்க்கத்தை ஒருவன் பின்பற்றினால் அவன் இறைவனின் அருளைப் பெற்று உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டு.

  நல்ல தொழிலோ வயதோ பாண்டித்தியம் ஜாதியோ பக்தி செய்வதற்கு தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் நல்ல மன உறுதியும் சிறந்த ஆண்மையும் ஒருவனுக்கு அவசியம் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இந்த ஸ்லோகம் சொல்லும் வழி உக்கிரசேனன் ஆண்மை எப்பேர்ப்பட்டது கம்சனின் தந்தைதான் உக்கிரசேனன் அரக்கனான கம்சன் தன் தந்தையைச் சிறையில் அடைத்துவிட்டு அதிகாரம் முழுவதையும் அபகரித்துக் கொண்டான் கம்சனின் சகோதரியான தேவகியின் மைந்தனாக கிருஷ்ணர் அவதரித்தார். கிருஷ்ணர் அழைத்து வரப்பட்ட போது அவர் கம்சனை வதம் செய்து அவனைக் கொன்றார் பிறகு கிருஷ்ணர் உக்கிரசேனரை சிறையிலிருந்து மீட்டு அவரை சிம்மாசனத்தில் அமர செய்தார் ஆகையால் பலவீனமாக இருப்பவனையும் இறைவன் ஆட்கொண்டு அருள் புரிகிறார் என்பது தெரிகிறது.

  இறைவன் கவனத்தை தன்பக்கம் இழுப்பதற்கு ஒருவன் சுந்தர வடிவமாக இருக்க வேண்டுமா இதற்கு பதில் கூனி. இவள் இராமாயண கூனியில்லை மகாபாரத கூனி மிகவும் அவலசட்சணத்துடனும் முதுகு வளைந்தும் காணப்பட்ட அவள் கிருஷ்ணரடத்தில் மிகுந்த பக்தி வைத்திருந்தாள் கிருஷ்ணர் மதுராவில் வந்து இறங்கியதும் கூன் விழுந்த குப்தா என்ற பெண்மணியை காண்கிறார் அவருக்கு சில வாசனை திரவியங்கள் சந்தனம் முதலியன அளித்தாள் அவளது பக்தியை கண்டு திருப்தி அடைந்த கிருஷ்ணர் அவளை சுந்தர ரூபவதியாக மாற்றினார். இறைவனுடைய அருளுக்கு பாத்திரமாக அழகு ஒன்றும் தகுதியாக கருதப்படவில்லை.

  செல்வத்தைக் கண்டு மயங்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம் இறைவனும் அவர்களைப் போலவே செல்வத்துக்கு மயங்குபவரா சுதாமா என்ற குசேலரிடம் பெரும் செல்வம் இருந்ததா? கிருஷ்ணரின் பால்ய நண்பனான சுதாமன். இருவரும் ஒன்றாக சேர்ந்து படித்தார்கள் அவர்கள் பிரிந்ததும் கிருஷ்ணர் அரசரானார் ஏழை பிராமணனாக இருப்பதை வைத்துக்கொண்டு எளிய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தார். வறுமையால் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் தனது சகிப்புத் தன்மையால் அவற்றைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் கோரமான வறுமையின் துயரை தாங்க முடியாமல் அவரது மனைவி அவரை கிருஷ்ணரைப் பார்த்து வருமாறு தூண்டினாள் சுதாமாவும் தன் பால்ய நண்பனை சந்திக்கும் சந்தோஷத்தில் அதற்கு ஒப்புக்கொண்டார். கிருஷ்ணரிடம் கொடுப்பதற்கு அவரிடம் சிறிது அவல் மட்டுமே இருந்தது அதை எடுத்துக் கொண்டு சென்று சுதாமர் கிருஷ்ணரை சந்தித்தார் கிருஷ்ணர் அவருக்கு நலன் விசாரித்துணை செய்து அவரை வரவேற்றார் தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணரிடம் கொடுப்பதற்கு சுதாமர் கூச்சப்பட்டார் கிருஷ்ணர் புரிந்து கொண்டு தாமே வலிய கேட்டுப் பெற்றுக்கொண்டார். பகவான் அவலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார் ஒவ்வொரு பிடி அவலும் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை பெறுக்கியது கிருஷ்ணரின் மனைவி ருக்மணி அவர் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினார்

  சொந்த ஊருக்குச் சென்று தம் வீட்டை கண்ட குசலேருக்கு அது அடையாளம் தெரியாத வகையில் மாட மாளிகையாக மாறியிருப்பதைக் கண்டார். மனைவியும் குழந்தைகளும் பட்டாடையுடன் இருப்பதையும் கண்டார் தான் கொடுத்த ஒரு பிடி அவலை உட்கொண்டதால் கிருஷ்ணர் தான் இவ்வளவு செல்வங்களையும் தனக்கு வாரி வழங்கியுள்ளார் என்பதை புரிந்து கொண்டார்.

  பகவான் கிருஷ்ணர் வெளியிலிருந்து வரும் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தெளிவாக புரிகிறது அப்படி என்றால் இறைவன் எதைத்தான் பக்தனிடம் எதிர்பார்க்கிறார் பக்தி ஒன்றை தவிர அவர் வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை பக்தி இருந்தால் போதும் அவர் திருப்தி ஆகிவிடுகிறார் ஆகையால் பக்தி மார்க்கத்தை அடைவதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட தகுதியும் ஒருவனுக்கு தேவையில்லை என்பதே அந்த ஸ்லோகம் விளக்குகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-