டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 11!

இந்தியா கல்வி
radhakrishnan tr

சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – விண்ணப்பிக்க வரும் 11 – ஆம் தேதி கடைசி நாள்

2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 115 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆன்-லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வரும் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் 23 விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், ஒரு சில ஆண்டுகளாக இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.