கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதே போல, 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர்.
இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கொரோனா அச்சத்தால் 32 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அதனால் அந்த தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 1
12 ஆம் வகுப்பு மாணவர்கள் எஞ்சிய ஒரு தேர்வை எழுதினால் தான் பாஸ் என்றும் அந்த தேர்வை எழுதவில்லை என்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து, அந்த தேர்வை எழுத 718 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம் என்றும் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு இறுதி நாள் பொதுத்தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை, dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், அவரவர் பயின்ற பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத் தான் கற்பிக்கப்படும் என்றும் கூறினாr