மனைவியை கொன்று கட்டிலுக்கு அடியில் வைத்து.. இருநாட்களாய் அதன் மேலே படுத்திருந்த கணவன்!

Published:

murder

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மனைவியைக் கொன்று அவரது உடலை படுக்கைக்குக் கீழே மறைத்து வைத்து அதன் மீது இரண்டு நாள்களாகப் படுத்து உறங்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆர்டி அஹிர்வார் (வயது32) மற்றும் அவரது கணவர் ஷெர் சிங் அஹிர்வார் போபால் நகருக்கு கிழக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாகர் நகரில் மோட்டினகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமான நிலையில், 10 வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கணவர் ஷெர் சிங் அஹிர்வார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அவரது மனைவியை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், தனது பெற்றோர் வீட்டில் சிலகாலமாக தனது பிள்ளையுடன் ஆர்டி அஹிர்வார் தங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது மகனை வெள்ளிக்கிழமை அன்று பெற்றோருடன் விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஷேர் சிங் அஹிர்வார் – ஆர்த்தி அஹிர்வார் தம்பதியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த சிலர், காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தகவல் கொடுத்துள்ளனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அதில், தங்கள் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஷேர் சிங், பெரிய கத்தியை வாங்கிச் சென்றதாகவும், குடித்துவிட்டு சுயநினைவை இழந்த நிலையில், கொலை செய்வது குறித்து பேசியதாகவும் தகவல் கொடுத்துள்ளனர்.

திங்கள்கிழமை காலை, ஷேர் சிங் வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர், வீட்டுக்குள் நுழைந்ததும், மிகவும் துர்நாற்றம் அடித்ததை அறிந்தனர். அப்போதுதான், வீட்டின் படுக்கைக்கு கீழே, ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஷேர் சிங் குடித்துவிட்டு தனது மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும், இதனால், அவர் தனது 10 வயது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததும், மகனை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டுக்கு வந்த போது, ஷேர் சிங் தனது மனைவியைக் கொன்றுவிட்டு அவரது கட்டிலின் கீழே இருக்கும் மரபலகையின் அறையில் அழுகிய துர்நாற்றத்துடன் சடலத்தை வைத்துள்ளார்.

உடனடியாக ஷேர் சிங்கை கைது செய்த காவல்துறையினர் ஆர்த்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் ஷெர் சிங் அஹிர்வாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

மேலும், ஷெர் சிங் அஹிர்வார் தனது மனைவியை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக படுக்கைக்கு அடியில் இருக்கும் மர சேமிப்பு பெட்டியில் இரண்டு நாட்களாக பூட்டி வைத்து, சகஜமாக இருந்துள்ளார் என்று காவல் துறையினர் தரப்பில் கூறியுள்ளனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஷெர் சிங் அஹிர்வார் இந்திய தண்டனை சட்டத்தின் படி(ஐபிசி) பிரிவு 302 ன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அந்த பெண்ணின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img