Homeஅடடே... அப்படியா?அயோத்தி ஶ்ரீராமர் கோயிலுக்கு 2.1 டன் கனமான மணி! இதன் சிறப்பே தனி!

அயோத்தி ஶ்ரீராமர் கோயிலுக்கு 2.1 டன் கனமான மணி! இதன் சிறப்பே தனி!

big-bell-for-ayodhya-ramar-temple
big-bell-for-ayodhya-ramar-temple

அயோத்தியில் ராம மந்திரம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கரங்களால் பூமிபூஜை நடந்தேறியது. இந்த ஆலயத்தை மூன்றரை ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்யவேண்டும் என்று இலக்காகக் கொண்டுள்ளார்கள்.

அயோத்தி ராம மந்திரில் பொருத்துவதற்கு 2.1 டன் எடையுள்ள மிகப்பெரும் மணி வடிவமைக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசம் ஜலேசர் என்ற இடத்தில் தாவூ தயால் என்ற ஹிந்து குடும்பம் இதனை தயாரிக்கிறது. கடந்த 4 தலைமுறைகளாக இந்த குடும்பம் பலவித வடிவங்களில் பித்தளை பொருட்களை தயார் செய்து வருகிறது. இவர்களிடம் மிகச்சிறந்த திறமைசாலி நிபுணர்களான முஸ்லிம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இத்தனை கனமான மணியை தாம் தயாரிப்பது இதுவே முதல் தடவை என்று தயால் குறிப்பிட்டார். மணி தயாரிப்பதில் எட்டுவிதமான தாதுப்பொருட்களான தங்கம், வெள்ளி ராகி, துத்தநாகம், தகரம், ஈயம், இரும்பு, பாதரசம் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.மணியில் எந்தவித ஒட்டு போடுவதும் இருக்காது. அதுவே இதன் சிறப்பு.

இதைத் தயாரிப்பதற்கு ரூ 21 லட்சம் செலவாகும். 25 பேர் நிபுணர்கள் நான்கு மாதங்களாக இதனை தயாரித்து வருகிறார்கள். உஜ்ஜயினியிலுள்ள மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு நாங்கள் ஆயிரம் கிலோ எடையுள்ள மணியை தயார் செய்து அளித்தோம் என்று தயால் கூறினார்.

இந்த மணியின் உருவத்தை முஸ்லிம் தொழிலாளி இக்பால் மிஸ்திரி வடிவமைப்பது மற்றுமொரு சிறப்பு. டிசைன் வடிவமைப்பில் இக்பால் மிகவும் திறமையானவர் என்று தயால் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட மிகப்பெரும் வடிவத்தில் பொருளை தயாரிக்கும் போது சிக்கல்கள் எப்போதும் அதிகமாக இருக்கும் என்று தயால் கூறினார். மாதக்கணக்கில் நடக்கும் இந்த செயலில் ஒரு சிறிய தவறு கூட நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அயோத்தி ராமர் ஆலயத்துத்காக நாங்கள் இதனை தயாரித்து வருகிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால் தோல்வி பயம் கூட எங்கள் மனதில் தொடர்கிறது என்று அவர் கூறினார். இதில் வெற்றியை சாதிப்போம் என்று நிச்சயமாக கூற முடியாது என்றார்.

இதன் சிறப்பு என்னவென்றால் இது மேலிருந்து கீழே வெறும் ஒரு ஒரே இரும்புத்துண்டால் செய்யப்படுவது. இதற்கு ஒட்டு போடுவது எங்கும் இருக்காது. இதுவே இந்த செயலை மிகவும் கஷ்டமாக ஆக்குகிறது என்று இக்பால் மிஸ்திரி விவரித்தார்.

நாட்டிலுள்ள மிக மிகப் பெரிய மணியை ராம மந்திரத்திற்கு காணிக்கையாக அளிக்கப் போகிறோம் என்று ஜலேசர் முனிசிபல் கார்ப்பரேஷன் சேர்மன் விகாஸ் மிட்டல் கூறினார்.

அயோத்தி விவாதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட்ட மறு கணமே இந்த மிகப்பெரும் மணியை தயாரிக்க வேண்டும் என்று நிர்மோகி அகாடா கேட்டுக்கொண்டது என்று கூறினார். இதனை நாங்கள் தெய்வத்தின் தீர்மானமாக ஏற்றுக் கொண்டோம். அதனால்தான் இந்த மணியை நாங்களே நன்கொடையாக ஏன் அளிக்கக்கூடாது என்று எண்ணினோம் என்று விகாஸ் சகோதரர் ஆதித்யா மிட்டல் கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,097FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,964FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...