June 14, 2025, 7:24 AM
28.8 C
Chennai

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

narendra modi in parliament

மக்களவைத் தேர்தலுக்குப் பின், முதல் முறையாக இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி உள்பட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவி ஏற்பு உறுதிமொழிகளைச் செய்து வைத்தார். முன்னதாக, தற்காலிக அவைத்தலைவராக பர்த்துஹரி மஹதப்க்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

நான், நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, இந்த மக்களவையினுடைய, உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், இறைவன் பெயரால் சபதமேற்கிறேன்.    அதாவது நான், விதிமுறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட, பாரதத்தின் அரசியல்சட்டத்தின்பால், மெய்யான சிரத்தை, மற்றும், அர்ப்பணிப்போடு இருப்பேன்.   நான், பாரதத்தின் இறையாண்மை, மற்றும் ஒருமைப்பாட்டைப், கேடுறாமல் பாதுகாப்பேன்.   மேலும், எந்தப் பதவியை, நான் ஏற்க இருக்கிறேனோ, அதற்குண்டான, கடமைகளை, சிரத்தையுடன் அவற்றை, முழுமையாக நிறைவேற்றுவேன்.  – என்று உறுதி மொழி உரைத்தார்.

18வது மக்களவைக்கு நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவில், பெரும்பான்மை பெற்ற தே.ஜ.கூ., சார்பாக, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. இன்று ஒரு பகுதி உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், நாளையும் உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். நாளை மறுநாள், 18வது மக்களவையின் அவைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. வரும் 27ம் தேதி, புதிய மக்களவையின் முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடக்கும். இறுதியில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார். அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும். தொடர்ந்து 22ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

3வது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி!

18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

நாடாளுமன்ற அரசியலில் இந்நாள் பெருமைக்குரியது மட்டுமல்ல கொண்டாட்டத்திற்குரிய நாள். சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில், புதிய உறுப்பினர்களுடன் அவை கூடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.,க்கள் அனைவரையும் வரவேற்கிறேன், வாழ்த்து தெரிவிக்கிறேன். நாடாளுமன்றக் கூட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் கூட்டமாக இது இருக்கும். புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது.

2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். உலகின் பெரிய தேர்தல் பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை ஒரு தரப்புக்கு மக்கள் கொடுத்துள்ளனர். இது நாடாளுமன்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம், நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் ஆட்சி நடைபெறும். அனைவரையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள். 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம். 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். இரண்டு முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.

நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்குப் பணியாற்ற எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.. என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

Topics

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் சொல்வது என்ன?

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று, மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செய்தி ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு

பஞ்சாங்கம் ஜூன் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories