புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும்; எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை உறுதியாக தெரிவித்தார்.
நாடாளுமன்றம் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கை உள்ளது என்று தம்பிதுரை கூறினார்.
காவிரி விவகாரத்தில் ராஜினாமா செய்வது தீர்வாகாது என்று கூறினார் தம்பிதுரை.
முத்துக்கருப்பன் எம்.பி.யின் ராஜினாமா முடிவு, அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார் தம்பிதுரை.
முன்னதாக நாடாளுமன்றத்தில் அதிமுக.,வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.