மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்: தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி

Published:

கேரள மாநிலத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்து கேளராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக தவிர அனைத்து கட்சிகள், மற்றும்  16 தொழிற் சங்கங்களும் பங்கேற்றது.

இந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக அரசு பேருந்துகள் இயங்கப்படவில்லை. அத்துடன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தமிழகத்தின் எல்லையான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. பந்த் காரணமாக தமிழக கேரள மாநில எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடியும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img