spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தென்பாண்டி நாட்டானின் பத்திரிகை இயல் மொழிபெயர்ப்பு அனுபவம்!

தென்பாண்டி நாட்டானின் பத்திரிகை இயல் மொழிபெயர்ப்பு அனுபவம்!

- Advertisement -

படித்து முடித்த கையோடு பத்திரிகை துறையில் வேலைக்கு சேர்ந்தான் நம்ம பாண்டி.

முதல் நாளில் a state owned company என்பதை ஒரு மாநிலத்தின் நிறுவனம் என மொழிபெயர்ப்பு செய்தான்.

ஆசிரியர் அழைத்தார். இங்க பாரு பாண்டி, இந்த மாதிரி Literal translation (நேரடி மொழிபெயர்ப்பு) செய்யக் கூடாது. இங்கு State என்பது அரசை குறிக்கும். ஆகவே இதை அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்று எழுத வேண்டும் என்றார்.

அடுத்தடுத்த நாட்களிலும் பாண்டியின் தவறுகள் தொடர்ந்தன. ஆசிரியரும் அவற்றை திருத்திக் கொண்டே வந்தார்.

Magistrate of Lucknow district என்பதை லக்னௌ மாவட்ட நீதிபதி என்று பாண்டி எழுத அதை லக்னௌ மாவட்ட ஆட்சியர் என ஆசிரியர் திருத்தினார்.

Minister of State- க்கு மாநில அமைச்சர் என எழுதியபோது அதை இணை அமைச்சர் என திருத்தினார் ஆசிரியர்.

அடுத்தமுறை, Secretary of defense, USA என வந்தபோது அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் என எழுதினான் பாண்டி. அதை அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் என ஆசிரியர் மாற்றியமைத்தார்.

தவறுகள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் பாண்டிக்கு சங்கடமாக இருந்தது. இனி தவறேதும் செய்ய கூடாது என மனதில் நினைத்துக் கொண்டான்.

இருப்பினும், President of India என்பதை இந்தியாவின் அதிபர் என பாண்டி எழுத இந்த முறை ஆசிரியர் கடுமையாக திட்டி விட்டார். இந்தியாவுல எங்கப்பா அதிபர் இருக்காரு? இந்திய குடியரசுத் தலைவர் என்று எழுதனும் என்றார் அதட்டலாக.

என்ன இருந்தாலும் பாண்டியின் தவறுகள் குறையவே இல்லை.
First Lady of India என்பதை இந்தியாவின் முதல் பெண் என்று பாண்டி எழுத அதை குடியரசுத்தலைவரின் மனைவி என்று ஆசிரியர் திருத்தினார்.

பாண்டிக்கு சலித்துவிட்டது. இந்த மொழிபெயர்ப்பு பிரிவே தனக்கு வேண்டாமென்று ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டான்.

சரி நீ நாளைக்கு சட்டசபைக்கு போ, அங்க முதல்வர் முக்கியமான விசயங்களை பேசுவார். அவற்றை கவனமாக குறிப்பெடுத்து வா என்றார் ஆசிரியர்.

அடுத்த நாள் சட்டசபையில் இருந்து நேராக அலுவலகத்திற்கு திரும்பிய பாண்டி, சற்று பதட்டத்துடன் கேட்டான், ஆசிரியரே! Union of India என்றால் என்ன?

டாட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe