
இன்று காலை மகாபலிபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, திடீரென கடல் அலைகளால் அடித்து வரப் பட்டு, அங்கே ஒதுங்கியிருந்த குப்பைகளைப் பார்த்ததும், அவற்றை எடுத்து சுத்தம் செய்யத் தொடங்கினார்.
கடற்கரையில் கடலலைகளால் அடித்து வரப் பட்டு, சேர்ந்திருந்த குப்பைகளை கீழே குனிந்து எடுத்து, அவற்றை ஒரு பையில் சேகரித்து, கையில் எடுத்து வந்தார். இந்த வீடியோக்களும், படங்களும் இன்று அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு வருகின்றன.
இந்த வீடியோவில் 32வது செகண்டில் இருந்து 36வது செகண்ட் வரை பாருங்கள்… புரியும். குடித்துவிட்டு, தமிழன் வீறாப்புடன் மப்பு கலையாமல் கடற்கரையில் வீசிச் சென்ற டாஸ்மாக் காலி புட்டியை குனிந்து, அறுவெறுப்பு சிறிதும் கொள்ளாமல், அதைத் தன் கையால் எடுத்து குப்பை சேகரிக்கும் பையில் வைத்து, கடற்கரையைத் தூய்மைப் படுத்தினார் பாரதத்தின் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனாலும், இன்னமும் சரக்கு போட்ட மிடுக்கும் மப்பும் கலையாமல் தமிழன் அடுத்த ரவுண்ட் சாராயத்துக்கு டாஸ்மாக் கடையில் வரிசையைத் தேடிக் கொண்டு அலைபாய்கிறான். அதே நேரம், தமிழகத்தின் புராதன சுற்றுலா தலங்கள், புண்ணியத் தலங்கள், பொது இடங்களில் மாலை, இரவு நேரங்களில் அமர்ந்து ‘சரக்கு’ அடித்து விட்டு நாசப் படுத்துகிறான். பிறருடைய சிரமங்களையோ, பொது இடங்களை நாசப் படுத்துகிறோமே, கண்ணாடிப் புட்டிகள் உடைந்து கண்ணாடிச் சில்லுகள் உடைந்து தெறித்து பிறர் கால்களை பதம் பார்க்குமே என்ற சமூக விழிப்புணர்வு கொஞ்சமும் இன்றி இருக்கும் டாஸ்மாக் தமிழனால் ஏற்படும் சூழல் சீர்கேட்டை எடுத்துக் காட்டும் விதமாகவும் பிரதமர் மோடியின் செயல் அமைந்துவிட்டது.
செருப்பு அணியாத கால்களுடன், கையில் குப்பைப் பை சகிதமாக, சுமார் அரை மணி நேரம் மாமல்லபுரம் கடற்கரையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி !! இடம் சுத்தமாச்சு, அதே நேரம், கிளீன் இந்தியா திட்டத்திற்கு விழிப்புணர்வு பிரசாரமும் ஆச்சு!
இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை உலக அளவில் பிரபலப் படுத்துவதில், மோடியைப் போல் இதுவரை எவரும் செய்ததில்லை என்பது டிவிட்டர் வாசிகளின் பகிரல்கள்.
மோடி – இந்தியனின் பெருமை.. !
கடற்கரையை ஒரு வாரமாக சுத்தம் செய்த நிலையில் எப்படி இன்று காலை பிரதமர் மோடி நடைபயணம் சென்ற பொழுது குப்பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் சேர்ந்திருக்கும் என்று கேட்பவர்களுக்கு கடற்கரையின் தன்மை தெரியாது என்பது புலப்படுகிறது . இன்று உலகளாவிய அளவில் நிலவும் மிகப்பெரிய பிரச்னை கடலில் கலந்திடும் பிளாஸ்டிக் பற்றியது தான் . ஒரு அளவிற்கு தான் பிளாஸ்டிக் குப்பைகளை கடல் தாங்கிடும் . ஒரு அளவிற்கு மேல் செல்லும் பொழுது கடல் அதனை கடற்கரைக்கு அடித்து விடும், மும்பையில் சொல்லி வைத்தாற்போல ஒவ்வொரு ஆண்டும் மூன்றே நாட்களில் கடலிலிருந்து ராட்சத அலைகளின் மூலம் பல நூறு டன் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகள் கடற்கரையில் அடித்து ஒதுங்கிடும் , கடலிலிருந்து வீசப்படும் அந்த குப்பைகள் மும்பையில் இந்த ஆண்டும் சில நாட்களுக்கு முன்னர் ஒதுங்கியது . உண்மையில் இது ஒவ்வொரு நிமிடமும் கடலில் கலக்கும் குப்பைகள் , முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு தான் . அது குறித்த சரியான விழிப்புணர்வை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்