
உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் வாங்கும் திமுக, மிகப் பெரிய கோடீஸ்வர கட்சி என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ‘சான்றிதழ்’ கொடுத்துள்ளார்
உள்ளாட்சித் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணமாக திமுக., ரூ.50 ஆயிரம் வசூலிக்க தீர்மானித்துள்ளது. இது குறித்த அறிவிப்பும் வெளியானது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுக., பணக்கார கட்சி. அதிமுக ஏழைக்கட்சி. திமுக.,வில் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், ஆட்சியின் சாதனைகள் என்கின்றனர். ஆனால், 2011 முதல் நாங்கள் தான் ஆட்சியில்உள்ளோம்.
எங்களின் சாதனைகள், திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் வகையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக., அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.