கனகதுர்கா கோயில் இடிப்பு: சந்திரபாபுவுக்கு நேர்ந்த கதிதான் ஜகனுக்கும்! பொதுமக்கள் சாபம்!

Published:

guntur kanakadurgatemple - 2026

குண்டூரில் கனக துர்கா கோயில் இடிக்கப்பட்டது. குண்டூரில் ‘நந்தி வெலுகு’ சாலையில் ‘கொல்லி சாரதா மார்க்கெட்’ எதிரில் இருந்த கனக துர்கம்மா கோயிலை தரைமட்டமாக்கினர் கார்ப்பரேஷன் ஊழியர்கள்.

சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக் கோயிலை இடித்தனர். நள்ளிரவில் ‘பொக்லைன் இயந்திரத்தின்’ உதவியோடு ஆலயத்தை தரைமட்டமாக்கினர். எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் அளிக்காமல் அதிகாரிகள் கோயிலை இடித்தது பற்றி ஆலய நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர்.

guntur kanakadurgatemple1 - 2026

பல்லாண்டுகளாக உள்ள கோயிலை இடித்து பற்றி உள்ளூர்வாசிகள் வருந்துகின்றனர். கார்ப்பரேஷன் நடவடிக்கை பற்றி ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முன்கூட்டியே தெரிவித்திருந்தால் விக்ரகங்களை பாதுகாப்பாக விதிமுறைப்படி எடுத்துச் சென்று வேறிடத்தில் நிறுவி, சாலை விரிவாக்கத்துக்கு ஒத்துழைப்பு தந்து இருப்போமே! இப்படி பூஜையில் உள்ள விக்கிரகங்களை கூட துவம்சம் செய்து இடித்து பாழாக்கி விட்டீர்களே என்று பக்தர்கள் மனம் குமுறுகின்றனர்.

கடந்த காலத்தில் சந்திரபாபு கூட புஷ்கரத்தின் போது இதுபோன்ற செயல்களை செய்தார். அவருக்கு நேர்ந்த கதிதான் ஜெகனுக்கும் நேரும் என்று சாபம் விட்டனர் . தனது செயலுக்காக ஜெகன் தகுந்த பலனை அனுபவிக்க வேண்டிவரும் என்று பக்தர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img