December 6, 2024, 10:57 AM
27.2 C
Chennai

ஒரே ஒரு மாநாடு; அரசின் ஒட்டுமொத்த முயற்சியும் ‘க்ளோஸ்’! தமிழக முஸ்லிம்களே அதிகம்!

தில்லியில் தப்ளிக் இ ஜமாஅத் இஸ்லாமிய மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 2,137 பேரின் அடையாளம் தெரிந்தது.. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிகம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுதும் கொரோனா பீதி அதிகரித்த நிலையில் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று அறிகுறி கடந்த ஜன.30இல் தெரியவந்தது. அதற்குள் உலக நாடுகள் பலவற்றில் இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது.

இந்நிலையில், தில்லியில் ஷாகீன் பாக் பகுதியில் சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவற்றை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் இஸ்லாமியர்களைத் திரட்டி போராட்டத்தை நடத்தி வந்தன. அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. மேலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களிலும் போராட்டத்தை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருந்தார்கள்.

கொரானோ வைரஸ் தொற்றால் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்ற அச்சத்தால், மத்திய மாநில அரசுகள் அவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, போராட்டங்களை கைவிடுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தன. ஆனாலும் அரசின் கெஞ்சலுக்கு மிஞ்சும் வகையில், உயிர் எங்களுக்கு மயிர், கொரோனாவுக்கு பயந்து வீட்டில் இருப்பதை விட சிஏஏ., என்.ஆர்.சிக்கு எதிராக போராடி சாவதே மேல் என்று அந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள அப்பாவி மக்களையும் தூண்டி கொரோனா நோய்த் தொற்றுக்கு பலிகடாவாக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு செயலில் இறங்கினர்.

இத்தனை விழிப்புணர்ச்சியும் கெஞ்சுதல்களும் ஏற்படுத்தப் பட்ட போதிலும், வெளிநாட்டில் இருந்து முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாநாடு என்று தெரிந்தும், தில்லி மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து தான் அதிகம் பேர் சென்றிருக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரத்தக்க தகவலாக உள்ளது. அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படமாட்டோம், நாங்கள் வைத்ததே சட்டம் என்ற எதேச்சாதிகார அகம்பாவப் போக்கால் இப்போது இஸ்லாமியக் குடும்பங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

ALSO READ:  சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

தில்லி மாநாட்டில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதால் நாடு முழுவதும் கொரோனா பீதி உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1507 ஆக உயர்ந்துள்ளது.

தில்லியில் மார்ச் 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது சவுதி, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தெலங்கானா, தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதையடுத்து தில்லி மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர்களுக்கு திரும்பிய அன