2 - 2026

தமிழகத்தில் ஏப்.,3 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் கோர்ட் தானாக முன்வந்து தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் கிளை, போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துள்ளது. மேலும் போராட்டங்களுக்கு தடை கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending