தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் நிச்சயம் கிடைக்கும் : சுப்ரீம் கோர்ட் உறுதி!

சற்றுமுன் தமிழகம்

Tamil News large 1991850 - 2026

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று  விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் குறித்து குறிப்பிடப்படவில்லை. திட்டம் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.