முத்துக்கருப்பன் அடித்த அந்தர் பல்டி: என்ன… ராஜினாமா… வா…?

Published:

IMG 20180402 WA0036 - 2026

நான் ராஜினாமா செய்யவில்லை என்று பல்டி அடித்தார் எம்.பி முத்துக்கருப்பன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறிய அதிமுக எம்.பி முத்துக்கருப்பன், திடீரென ராஜினாமா கடிதத்தை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அதிமுக மக்களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்யத் தயார் என அவையில் கூறிய நிலையில், அதிமுக.,வின் மாநிலங்களவை எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக கூறி வந்தார்.

இன்று குடியரசு துணைத் தலைவர்  வெங்கய்ய நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க இருந்த அவர், பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழில் எழுதியிருந்த தனது ராஜினாமா கடிதத்தை காட்டினார். அந்த கடிதம் நிராகரிக்கப் பட வாய்ப்புள்ளதாக சிலர் கூறினர்.

இந்நிலையில், திடீரென தன் ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவரிடம் கொடுக்கவில்லை என முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ராஜினாமா செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் கடிதத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

முன்னதாக இது குறித்து காலை முதலே பலவிதமான செய்திகள் உலா வந்தன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img