பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளதை வரவேற்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான
அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து, தமிழகத்தில் உள்ள ஊடகங்களும், சமூக ஊடகங்களில் சிலரும், டேனியல் காந்தி போன்ற தேசவிரோதக் கருத்துகளை வெளிப்படுத்தும் சிலரும் சந்தேகம் எழுப்பி, தாக்குதல் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது, தமிழகத்தை நோக்கி தேசியப் புலனாய்வு முகமையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பால்கோட் பகுதியிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும் என1 பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

இதுகுறித்து அக்பருத்தீன் ஓவைசி செய்தியாளர்களிடம் கூறியபோது,

‘‘இதை நாங்கள் வரவேற்கிறோம். இது சரியான நடவடிக்கை. ஆனால் இந்த நடவடிக்கையை 12 நாட்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும்! இந்த விவகாரத்தில் நாங்கள் அரசுக்கு ஆதரவாக நிற்கிறோம். அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளை ஒரு அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால், மற்றொரு நாடு தன்னுடைய பாதுகாப்புக்காக பயங்கரவாத வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான இலக்கை நோக்கி செயல்பட உரிமை உள்ளது.

பாகிஸ்தானிய பயங்கரவாதத் தலைவர்கள் ஹஃபிஸ் சாயீத் மற்றும் மசூத் அஸார் ஆகியோர் எல்லாம் சாத்தான்களாக இருக்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள்
எல்லாம் தீமையானதுதான்’’ எனக் கூறினார்.

மோடிக்கு எதிராகவும், பாஜக.,வுக்கு எதிராகவும் வன்மையான கருத்துகளையும் கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கும் அக்பருத்தீன் ஓவைசி, இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்ததை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய ஆதரவு திராவிட இயக்கங்களும், பயங்கரவாதச் சிந்தனைகளுடன் தமிழக மக்களுடன் மக்களாகக் கலந்து விட்டவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...