எல்லை தாண்டி வந்த பாக். விமானம்! இந்தியா பதிலடி!

இந்தியா சற்றுமுன்

pak aircraft f16 - 2026

பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 ரக விமானம், இன்று எல்லைகடந்து இந்திய வான்வெளியில் பறந்து வந்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் விமானத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து பாகிஸ்தான் விமானம் தன் எல்லைக்கு திரும்பிச் சென்றது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்கு 3 கிமீ., உள்பகுதியில் நவ்ஷேரா செக்டாரில் லாம் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்த விமானம் விழுந்ததாகக் கூறப் படுகிறது. பாகிஸ்தான் விமானப் படையின் எஃப்-16 விமான பாராசூட் கீழே விழுந்து கிடந்ததாகவும், அந்த பைலட்டின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்திய விமானப்படை தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதன்கோட் விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, ஸ்ரீநகரில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. பல விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.