கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை விழாக்கள் விசேஷங்கள்

thiruvannamalai kodi - 2026திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் 64 அடி உயர தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 23ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

annamalaiyartemple - 2026

தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

annamalaiyar - 2026
இன்று 14-11-18 புதன்கிழமை காலை ஶ்ரீ அருணாசலேஸ்வரர் கார்த்திகை ப்ரம்மோத்ஸவ த்வஜாரோஹன அலங்காரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.