நெல்லை மாவட்ட ஊர்களின் தமிழ்ப்பெயர் மாற்ற கோரிக்கை அனுப்பலாம்!

Published:

nellaiappar temple kumbabishekam - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்ப்பெயர்கள்  மாற்றம் செய்யப்படவுள்ளது அதற்கு பொதுமக்கள் கோரிக்கைகள் எழுதி அனுப்பலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால், சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்படும் சான்றாக திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுதல்) என்று அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் தமிழக அரசால் உயர்நிலைக்குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்நிலைக்குழு கூடி, மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், வருவாய் கிராமங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட ஊர்ப்பெயர்களை மாற்றம் செய்யவுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு நேரிலும், அஞ்சலிலும், tvltamilvalarchi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலிலும் 15.11.2018க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

பெறப்படும் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்திட அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img