கஜா புயல்… நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை;

சற்றுமுன் தமிழகம் திருச்சி மதுரை லைஃப் ஸ்டைல்

gaja cyclone - 2026

கஜா புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கஜா புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

கஜா புயலால் கடல் சீற்றத்துடஜ் காணப்படும் என்ற எச்சரிக்கையால் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். இதுவரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல் இன்று காலை 5.30 மணி முதல் மணிக்கு 6 கி.மீ., வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேற்கு – தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் நாளை மாலை பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்கும்.

கஜா புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ., ஆகவும், சில சமயம் 110 கி.மீ., வரையும் இருக்கும்.

கடல் பகுதி மேசாமடைந்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். வியாழக்கிழமை நாளை புயல் கரையைக் கடக்க உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிதீவிர கனமழை பெய்யக் கூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.