இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீச்சு! ஜெட் விமானம் விழுந்து விபத்து! விமானி பலி!

இந்தியா சற்றுமுன்

aircraft - 2026

இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடந்துள்ளது. அதே நேரம், ஜெட் விமானம் காஷ்மீரில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதி. இதில் விமானி உயிரிழந்துள்ளார்.

காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது பாக்., விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது.இதில் சேதம் எதுவும் இல்லை என்று ராணுவ அதிகாரிகள் கூறினர்.

ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் ராணுவ ஜெட் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதன் விமானி உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் இருந்து இரு உடல்கள் மீட்கப் பட்டுள்ளன என்று போலீஸார் கூறியுள்ளனர்.

விபத்து நடந்த பகுதிக்கு தொழில்நுட்பக் குழு சென்றுள்ளது. விமானப் படையின் எம்ஐ-17 ரக போக்குவரத்து ஹெலிகாப்டர் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.